மர்மமான முறையில் மரணமடைந்த பிரபல இளம் பாடகர் 

இருப்பினும் மூன் பின் இறந்ததற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. மூன் பின் இறக்கும் போது அவருக்கு 25 வயது.

மர்மமான முறையில் மரணமடைந்த பிரபல இளம் பாடகர் 

தென்கொரிய பாப் பாடகரும் நடிகருமான மூன் பின் காலமானார். கங்னாமில் உள்ள அவரது வீட்டில் அவர் மர்மமான முறையில் உயிரிழந்திருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும் மூன் பின் இறந்ததற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. மூன் பின் இறக்கும் போது அவருக்கு 25 வயது.


 
பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் தான் அவரது மரணத்துக்கான காரணம் தெரிய வரும் என முதல் கட்ட விசாரணையில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்மைய காலமாக கொரியாவில் பாடகர்களும் இளம் நடிகர்களும் மர்மமான முறையில் மரணிப்பது தொடர்கதையாகி உள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஃபெண்டாஜியோ லேபிள் டிரெய்னிங்கில் பாடகராக அறிமுகமானவர் மூன்பின் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW