Wed, May12, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Latest Posts

100 மில்லியன் ஆண்டுகள் முன் உள்ள ராட்சத உயிரினம் … பார்த்து பதறி போன மக்கள்!

சில நாட்களுக்கு முன்பு, சிங்கப்பூர் நாட்டின் மேக்ரிச்சி நீர்த்தேக்கத்தில் வினோதமான கடல்வாழ் உயிரினம் ஒரு தென்பட்டது.

அந்த கடற்வாழ் உயிரினத்துக்கு கூரிய பற்கள், பெரிய தாடைகளோடு இருந்தது. அதனை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த உயிரினம் முதலையாக இருக்கலாம் என்று அங்கிருந்த மக்கள் முதலில் நினைத்தனர். அதனால் அதன் அருகில் செல்லவே மக்கள் நடுங்கினர். இதை குறித்து புகார் அளிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து நகர நீர் நிறுவனத்தின் அதிகாரிகளும், தேசியப் பூங்கா வாரிய அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வு செய்த அதிகாரிகள் அந்த உயிரினம் முதலை என்று கூறினார். மேலும் அது முதலைபோல் இருக்கும் மீன் வகையை சேர்ந்த முதலை மீன் என்று கூறினார்.

மேலும் இந்த மீன் 10,000 மைல்களுக்கு அப்பால் இருந்து வந்திருக்கிறது என்றும் அது இந்த பகுதியில் வாழும் உயிரினம் இல்லை என்றும் கூறினார்.
இந்த முதலை மீனை யாரோ வீட்டில் வளர்த்துள்ளனர். பின் அது பெரிய அளவில் வளர்த்ததால் அதனை நீரில் விட்டிருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர்.

இந்த முதலை மீன் மற்ற உயிரினங்களை வேட்டையாடி உண்ணும் தன்மை உடையது. எனவே இந்த மீனால் அந்தப் பகுதியின் சுழலியல் பாதிக்கப்படலாம்.

அதனால் இந்த முதலை மீனை மேக்ரிச்சி நீர்த்தேக்கத்தில் இருந்து மாற்றி வேறு இடத்திற்குக் கொண்டு சென்றனர். இந்த முதலை மீன் உலகின் மிகவும் பழமையான உயிரினமாகும். இது சுமார் 100 மில்லியன் ஆண்டுகளாக பூமியில் வாழ்ந்து வருகிறது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest Posts

சினிமா

x