” இந்திய ரசிகர்களை போன்றில்லை பாகிஸ்தான் ரசிகர்கள்” – சர்ஃபராஸ் அகமது

0

ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித்தை “ஏமாற்றுக்காரர்” என்று இந்திய ரசிகர்கள் கூறியது போன்று பாகிஸ்தான் ரசிகர்கள் கூற மாட்டார்கள் என, பாகிஸ்தான் அணித்தலைவர் சர்ஃபராஸ் அகமது, தெரிவித்துள்ளார்.

பந்தை சேதப்படுத்திய காரணத்துக்காக ஒரு வருடம் தடை செய்யப்பட்டிருந்த ஸ்மித், அணிக்கு திரும்பிய போது, இந்திய ரசிகர்கள், “ஏமாற்றுக்காரர்” என்று கூறி கலாட்டா செய்தனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், விராட் கோலி துடுப்பெடுத்தாடியபோது, ஸ்மித்துக்கு எதிராக ரசிகர்கள் கோஷமிட்டனர். ஆனால், விராட் கோலி ரசிகர்களிடம் அப்படி செய்யாதீர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்துங்கள் என்று சைகை மூலம் தெரிவித்தார்.

விராட் கோலி மற்றும் ஸ்மித் இருவரும் எதிர்வரும் போது கை கொடுத்து கொண்டனர். இதற்கு முன்பு விராட் கோலி ஆஸ்திரேலிய வீரர்களுடன் களத்தில் மோதியுள்ளார். ஆனால், இப்போது அவரின் செயல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

பாகிஸ்தான் அணி இன்று ஆஸ்திரேலிய அணியை டவுன்டனில் எதிர்கொள்ளவுள்ள நிலையில், “பாகிஸ்தான் ரகிகர்கள் அப்படி செய்ய மாட்டார்கள். அவர்கள் கிரிக்கெட்டை விரும்புபவர்கள், கிரிக்கெட்டுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், வீரர்கள் மீது அன்பு செலுத்துபவர்கள்” என்று சர் ஃபராஸ் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் இப்போது புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.

x