Sun, Jan17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

நிவர் புயல் முழுவதும் கரையை கடந்தது

நிவர் புயல் புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் பகுதியில் இரவு 11.30 முதல் 2.30 மணி வரை முழுவதுமாக கரையை கடந்துள்ளது.

இதனால், அதி தீவிர புயலாக இருந்து தீவிர புயலாக வலுவிழந்த நிலையில், அடுத்த 6 மணி நேரத்தில் மேலும் வலுவிழக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 21-ந் திகதி வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று நிவர் புயலாக மாறியது. பின்னர் தென்மேற்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த நிவர் புயல் மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து வந்த நிலையில், தீவிர புயலாக மாறியிருப்பதாகக் கூறப்பட்டது.

இதனிடையே புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் அருகே நவம்பர் 25 நள்ளிரவு 11.30 மணி அளவில் கரையை கடக்க தொடங்கிய நிவர் புயல், நவம்பர் 26 2.30 மணி வரை முழுவதும் கரையைக் கடந்தது.

வானிலை ஆய்வு மைய தகவல்படி, தற்போது, புயலானது வலுவிழந்துக்கொண்டு வருகிறது. மேலும், தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் கனமழை இருக்கும் என்றும் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயலால் ஏற்பட்ட சேதம் தொடர்பாக இதுவரை முழு தகவ்ல் இல்லை.

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தகவல்

இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், புயல் தொடங்கியது முதல் அரசுக்கு மக்கள் முழுமையாக 100 சதவிகிதம் ஒத்துழைப்பு கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், அவசர கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் தொடரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

36 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சேதாரங்களை கணக்கீடு செய்து நிவாரணம் மேற்கொள்ளப்படும் என்றும், பயிர் சேதத்திற்கு காப்பீடு, இழப்பீடு பேரிடர் மேலாண்மை விதிகளுக்குட்பட்டு வழங்கபடும் என்றும், அமைச்சர் தெரிவித்தார். அதேபோல், மழையினால் உயிரிழப்பு இல்லை என்றும் ஆர்.பி உதயகுமார் குறிப்பிட்டார்.

நிவர் புயல் எதிரொலியால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைகாற்றுடன் பலத்த மழை கொட்டி வரும் நிலையில், மாநில வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம், புயல் கால அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.

மாநில அளவில் அவசர உதவி எண் 1070, மாவட்டங்கள் அளவில் 1077 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest news

Related news