வீட்டில் இறந்து கிடந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 நபர்கள்!

மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி மாவட்டத்தில் உள்ள ஹைசால் பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

வீட்டில் இறந்து கிடந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 நபர்கள்!

மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி மாவட்டத்தில் உள்ள ஹைசால் பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்கள் அனைவரது உடல்களும் ஒரு வீட்டில் இருப்பதாக தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

 இறந்து கிடந்தவர்கள் உடல்களை கைப்பற்றிய பொலிசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக பொலிசார் தரப்பில் கூறுகையில், அந்த வீட்டில் இருந்து 9 சடலங்களை நாங்கள் கைப்பற்றினோம். மூன்று பேரின் சடலங்கள் ஒரு பகுதியிலும், ஆறு பேரின் சடலங்கள் வீட்டின் மற்றோரு பகுதியிலும் கண்டுபிடித்தோம்.

உயிரிழந்தவர்கள் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். எனினும் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகே உண்மை தெரிய வரும் என தெரிவித்துள்ளனர்.