உங்களுக்கு 2021 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை உங்களின் ராசியை வைத்து தெரிந்து கொள்ளலாம். இப்போது 2021 ஆம் ஆண்டு யாருக்கு எப்படி இருக்கப் போகிறது என வருடாந்திர பலன்களைக் காண்போம் வாருங்கள்.
மேஷம் – மேஷ ராசிக்காரர்களுக்கு 2021 ஆம் ஆண்டு சிறந்தது என்பதை நிரூபிக்கும். இந்த ஆண்டு உங்கள் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நீங்கள் பெரிய வெற்றிகளைக் காண்பீர்கள். ஆண்டின் நடுப்பகுதியில் உங்களின் நிதி நிலைமையில் பெரிய முன்னேற்றத்தைக் காண்பீர்கள். குடும்ப வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். உங்கள் குடும்பத்துடனான உங்களின் உறவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் கொஞ்சம் விழிப்போடு இருக்க வேண்டும். குறிப்பாக உண்ணும் உணவு மற்றும் பானங்களில் அலட்சியமாக இருக்காதீர்கள்.
ரிஷபம் – ரிஷப ராசிக்காரர்களுக்கு 2021 ஆம் ஆண்டு கலவையானதாக இருக்கப் போகிறது. இந்த ஆண்டு நீங்கள் சில சமயங்களில் நல்ல வெற்றியைப் பெற்றாலும், சில சந்தர்ப்பங்களில் ஏமாற்றமடைவீர்கள். ஆண்டின் தொடக்கத்தில் நீங்கள் சவால்களை எதிர்கொள்ளக்கூடும். மார்ச் மாதத்தில் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக சற்று மன அழுத்தத்திற்கு உள்ளாவீர்கள். வர்த்தகத்தில் இருப்பவர்கள், இந்த வருடம் நிறைய போராட வேண்டியிருக்கும். இந்த ஆண்டு நீங்கள் நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். பணி புரிபவர்கள், விரும்பிய இடத்தில் இடமாற்றம் பெற வாய்ப்புள்ளது. இதனால் உங்கள் வருமானமும் உயரலாம். திருமணமாகாதவர்களுக்கு, இந்த ஆண்டு திருமணம் நடக்கும்.
மிதுனம் – மிதுன ராசிக்காரர்களுக்கு 2021 ஆம் ஆண்டின் ஆரம்பம் மிகவும் சூப்பராக இருக்கும். ஆண்டின் ஆரம்பத்தில் வேலை இல்லாதவர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. அதே சமயம், வர்த்தகர்கள் ஆண்டின் நடுப்பகுதியில் சில சிக்கல்களை சந்திக்கலாம். உங்களின் வேலை தவறாக நடக்க வாய்ப்புள்ளது. இருந்தாலும், இப்பிரச்சனை விரைவில் சரியாகும். நிதி பற்றி பேசுகையில், இந்த ஆண்டு கலவையானதாக இருக்கும். ஆண்டின் இறுதியில், லாபத்தைக் காண்பீர்கள். குடும்ப வாழ்க்கை இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும்.
கடகம் – கடக ராசிக்காரர்களுக்கு 2021 ஆம் ஆண்டு சிறந்ததாக இருக்கும். இந்த ஆண்டு உங்களின் கடின உழைப்பிற்கான பலனை பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. என்ன தான் ஆண்டின் ஆரம்பத்தில் சவால்களை எதிர்கொண்டாலும், உங்களின் அனைத்து வேலைகளையும் சிறப்பாக முடிப்பீர்கள். வர்த்தகர்கள் லாபத்தைப் பெற அதிக வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெறலாம். நிதி நிலைமை மேம்படுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. உங்கள் மனைவியுடன் சண்டை போடுவதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் ஆண்டியின் இறுதியில், மனைவியுடனான உங்கள் உறவு முறிந்து போகக்கூடும். புத்திசாலித்தனமாக செயல்பட்டால், நீங்கள் பல சிக்கல்களைத் தவிர்க்கலாம். ஆரோக்கியத்தைப் பற்றி பேசும் போது, உங்களின் கவனக்குறைவு/அலட்சியம் ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகரிக்கும்.
சிம்மம் – சிம்ம ராசிக்காரர்களுக்கு 2021 ஆம் ஆண்டு ஏற்றத் தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். நீங்கள் வெற்றியைக் காண்பீர்கள். ஆனால் அதற்கு நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்களின் பணிகள் எதுவும் எளிதாக முடிக்கப்படாது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலம், உங்களுக்கு மிகவும் பிஸியான காலமாக இருக்கும். அதே சமயம் இக்காலத்தில் நீங்கள் பதவி உயர்வைப் பெறலாம். வர்த்தகர்களுக்கு அக்டோபர் மாதம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். நீதிமன்ற வழக்குகளில் நீங்கள் வெற்றிப் பெறுவீர்கள். பணத்தால் உங்களின் மன அழுத்தம் அதிகரிக்கலாம். முக்கியமாக உங்களின் பணம் எங்காவது சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது.
கன்னி – கன்னி ராசிக்காரர்களுக்கு 2021 ஆம் ஆண்டின் ஆரம்பமானது பணத்தின் அடிப்படையில் மிகவும் நன்றாக இருக்கும். இக்காலத்தில் திடீரென்று நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. உங்களின் கடின உழைப்பால் நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள். நீங்கள் வேலையை மாற்ற திட்டமிட்டிருந்தால், இந்த ஆண்டு ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல வேலையைப் பெறுவீர்கள். ஒருவேளை தொழில் தொடங்க விரும்பினால், இந்த ஆண்டு அது நிறைவேறும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, நீங்கள் திருமணமாகாவராக இருந்தால், இந்த ஆண்டு திருமணம் நடக்கும்.
துலாம் – துலாம் ராசிக்காரர்களுக்கு 2021 ஆம் ஆண்டில் உங்களின் கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவீர்கள். ஆண்டின் ஆரம்பம் மிகவும் அற்புதமாக இருக்கும். இந்த காலத்தில் நீங்கள் எடுக்கும் எந்த முயற்சியிலும் பெரிய வெற்றியைப் பெறுவீர்கள். உங்களின் புத்திசாலித்தனம் மற்றும் அறிவால் ஒரு பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். ஆண்டின் நடுப்பகுதி உங்களுக்கு நிதி ரீதியாக சூப்பராக இருக்கும். செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். இக்காலத்தில் நீங்கள் குழந்தைகள் தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.
விருச்சிகம் – விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2021 ஆம் ஆண்டு சிறப்பான காலம் என்பதை நிரூபிக்கும் வகையில் இருக்கும். இந்த ஆண்டில் நிலுவையில் உள்ள உங்களின் பல பணிகள் முடிக்கப்படும். உங்களின் நிதி நிலைமையை மேம்படுத்துவதற்கான முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பணிபுரிபவர்களின் வருமானம் அதிகரிக்கும். வர்த்தகர்களின் வியாபாரம் அதிகரிக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி கூற வேண்டுமானால், குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். இந்த ஆண்டு மாணவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். பொறியியல், சட்டம், மருத்துவம் போன்றவற்றைப் படிக்கும் மாணவர்கள் நல்ல முடிவுகளைப் பெறலாம்.
தனுசு – தனுசு ராசிக்காரர்களுக்கு 2021 ஆம் ஆண்டின் ஆரம்பம் நன்றாக இருக்கும். இந்த காலத்தில் பணத்தைப் பொறுத்தவரை சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அதே சமயம் இந்த காலத்தில் நல்ல பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இருந்தாலும், உங்களின் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாது. ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலம் உங்களுக்கு ஓய்வளிக்கும் காலமாக இருக்கும். பணிபுரிபவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். வியாபாரம் செய்பவர்கள், சில சவால்களை எதிர்கொள்ள நேரிடும். இருந்தபோதிலும் வெற்றியைப் பெறுவார்கள். இந்த ஆண்டின் இறுதியில் குடும்பத்துடன் பயணம் செய்ய வாய்ப்புக்கள் கிடைக்கும்.
மகரம் – மகர ராசிக்காரர்களுக்கு 2021 ஆம் ஆண்டு ஏற்றத் தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். ஆண்டின் ஆரம்பம் சாதாரணமாக இருக்கும். அதே சமயம் சில சிக்கல்களையும் சந்திக்கலாம். மே முதல் ஜூலை வரையிலான காலம் உங்களுக்கு சற்று சாதகமான காலமாக இருக்கும். ஆனால் இக்காலத்தில் ஆரோக்கிய பிரச்சனைகளால் சற்று கவலைப்படுவீர்கள். உங்களின் செலவுகள் அதிகரிக்கும். பணியைப் பற்றி பேசுகையில், பேஷன் டிசைனிங், நடிப்பு போன்ற துறைகளுடன் தொடர்புடைய மக்களுக்கு இந்த ஆண்டு சிறந்ததாக இருக்கும். குடும்ப வாழ்க்கையைப் பற்றி கூற வேண்டுமானால், பெரிய பிரச்சனைகள் எதுவும் இருக்காது. இருப்பினும் குடும்ப உறுப்பினர்களுடன் போதுமான நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள்.
கும்பம் – கும்ப ராசிக்காரர்கள் 2021 ஆம் ஆண்டு சிறந்த முடிவுகளைப் பெறுவார்கள். வியாபாரம் செய்பவர்கள், இந்த ஆண்டு பல பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணங்களால் நல்ல ஆதாயமும் கிடைக்கும். வணிகத்தை வளர்க்க வேண்டுமென்ற உங்களின் கனவு நனவாகும். மறுபுறம், பணி புரிபவர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களாக இருந்தால், மே முதல் ஜூலை வரையிலான நேரம் உங்களுக்கு மிகவும் முக்கியமான காலமாக இருக்கும்.
மீனம் – மீன ராசிக்காரர்கள் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பணம் தொடர்பான கவலைகளில் இருந்து விடுபட வாய்ப்புள்ளது. அதோடு ஒரு பெரிய கடனையும் திருப்பி செலுத்துவீர்கள். காதல் திருமணம் செய்ய நினைப்பவர்கள், இந்த ஆண்டு காதல் திருமணம் செய்வார்கள். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலம் உங்களுக்கு சற்று சாதகமான காலமாக இருக்கும். இந்த காலத்தில் உங்களின் உடல்நலம் குறையக்கூடும். எனவே எச்சரிக்கையாக இருங்கள். இந்த ஆண்டு சட்ட சவால்களில் இருந்து விலகி இருப்பது நல்லது.
Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News atColombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.
கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான ஹைதி தலைநகர் போர்ட் அவ் பிரின்சில் 8 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மிகப் பெரிய சிறைச்சாலை உள்ளது. இங்கு கொடூர குற்றங்களில் ஈடுபட்ட கைதிகள் 1500க்கும் மேற்பட்டோர்...
சவுதி அரேபியப் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் (Mohammed bin Salman), அந்நாட்டுச் செய்தியாளர் ஜமால் கஷோகியின் (Jamal Khashoggi) கொலைக்கு ஒப்புதல் அளித்ததாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
2018-ஆம் ஆண்டு நடந்த சம்பவத்துக்குப்...
ஒரு சகோதரியைப் பெறுவது வாழ்க்கையின் மிகவும் அழகான சந்தோஷங்களில் ஒன்றாகும். எப்போதும் உங்களுக்கு ஆதரவாகவும், உங்களை விட்டு விலகாத பாதுகாப்பு அரணாக அவர்கள் இருப்பார்கள்.
சிலசமயங்களில் சிறிய தொந்தரவுகளை நீங்கள் அனுபவித்தாலும , தேவைப்படும்...