எரிபொருளை பெற்றுக்கொள்ள புதிய முறை

எரிபொருள் தட்டுப்பாடுக்கான தீர்வு மற்றும் தடையில்லா மின் விநியோகம் என்பவை வழமைக்கு திரும்பும் வரை கட்டுப்பாடுகளுடனேயே எரிபொருளை விநியோகிக்க வேண்டியுள்ளது.

எரிபொருளை பெற்றுக்கொள்ள புதிய முறை

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நுகர்வோரை பதிவுசெய்து வாராந்தம் எரிபொருளை வழங்குவதை தவிர வேறு வழியில்லை. ஜூலை மாதம் முதல் வாரத்திலிருந்து இந்த நடைமுறை பின்பற்றப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர செய்துள்ள டுவிட்டர் பதிவில் ,

எரிபொருள் தட்டுப்பாடுக்கான தீர்வு மற்றும் தடையில்லா மின் விநியோகம் என்பவை வழமைக்கு திரும்பும் வரை கட்டுப்பாடுகளுடனேயே எரிபொருளை விநியோகிக்க வேண்டியுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஒரு வாரத்திற்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்கின்ற நிலையில், சில நுகர்வோர் தங்கள் இயந்திரங்கள் மற்றும் ஜெனரேட்டர்களுக்காக ஒரு மாதம் அல்லது அதற்கும் மேலதிகமாக உபயோகிக்கக் கூடியளவிற்கு எரிபொருளை சேகரிக்கின்றனர்.

4 மணித்தியால மின்சாரம் வழங்குவதற்காக டீசல், எரிபொருள் மற்றும் எண்ணெய் ஆகியவற்றுக்காக மாதமொன்றுக்கு 100 மில்லியன் டொலர் கூடுதலாக செலவிடப்படுகிறது.

எரிவாயு பற்றாக்குறையால் மின்சாரம் மற்றும் மண்ணெண்ணெய்க்கான தேவை அதிகரித்துள்ளது. 4 மாதங்களுக்கு முன்பு 200 மில்லியன் டொலராக இருந்த மாதாந்திர எரிபொருள் செலவு தற்போது 550 மில்லியன் டொலராக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில் நாட்டின் பொருளாதார நிலைமை வலுப்படுத்தப்படும் வரையும் ,  24 மணித்தியாலங்களும் மின்சாரத்தை வழங்கக் கூடிய நிலைமை ஏற்படும் வரையிலும் நிலையான எரிபொருள் விநியோகம் சாத்தியமாகும் வரையிலும் நுகர்வோர்களை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பதிவு செய்து அவர்களுக்கு வாராந்திர ஒதுக்கீட்டை வழங்குவதைத் தவிர வேறு வழியில்லை. ஜூலை முதல் வாரத்தில் இந்த அமைப்பு நடைமுறைக்கு வரும் என நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.