இலங்கையின் தேசிய வர்த்தக முகாமைத்துவ நிறுவனம் முகத்தை அடையாளம் காணும் முறைமையை நிறுவுகிறது

முகத்தை அடையாளம் காணும் மென்பொருளானது ரஷ்யாவின் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வீடியோ பகுப்பாய்வு நிறுவனமான NtechLab ஆல் உருவாக்கப்பட்டது.

இலங்கையின் தேசிய வர்த்தக முகாமைத்துவ நிறுவனம் முகத்தை அடையாளம் காணும் முறைமையை நிறுவுகிறது

முகத்தை அடையாளம் காணும் மென்பொருளானது ரஷ்யாவின் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வீடியோ பகுப்பாய்வு நிறுவனமான NtechLab ஆல் உருவாக்கப்பட்டது.

இலங்கையின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான தேசிய வர்த்தக முகாமைத்துவ நிறுவனம் (NIBM) முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் பணியில் ஈடுபடுத்தியுள்ளதாகத் திங்கட்கிழமை அறிவித்தது. இந்த அமைப்பு NtechLab, ரஷ்ய முக அங்கீகார மென்பொருள் வழங்குநரால் உருவாக்கப்பட்டதுடன் இது உள்ளூர் தொழில்நுட்ப நிறுவனமான Green Orgro உடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. 

முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய இலங்கையின் முதல் கல்வி நிறுவனம் NIBM ஆகும். அணுகல் கட்டுப்பாடு மற்றும் வருகை மேலாண்மைக்கு இந்த அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. முகத்தை அடையாளம் காணலானது மாணவர்களுக்குப் பல்கலைக்கழகத்திற்கு விரைவான, தொடர்பு இல்லாத மற்றும் வசதியான அணுகலை அனுமதிக்கும்.

“இன்று, முகத்தை அடையாளம் காணலானது பாதுகாப்பையும் காப்புத்திறனையும் உறுதி செய்வதற்கான இறுதியான கருவியாகும். பெளதீக அனுமதிச்சீட்டை வீட்டில் மறந்துவிடலாம் அல்லது வேறொருவருக்குக் கொடுக்கலாம், ஆனால் மற்றொரு நபரின் முகத்தால் கட்டிடத்திற்குள் நுழைவது சாத்தியமில்லை. முகத்தை அடையாளம் காணுகின்ற நவீன அமைப்புகள் 99.9% இற்கும் அதிகமான துல்லியத்தை வழங்குகின்றன,” இவ்வாறு NIBM இன் ஆலோசகர் தலைவர் டாக்டர் ஹிமேந்திர பலாலே கூறினார்.

“கல்வி நிறுவனங்களிடம் இருந்து நமது தொழில்நுட்பத்தில் மிகுந்த ஆர்வத்தை நாம் காண்கிறோம்கோவிட்-19 தொற்றுப்பரவலிற்குப் பிறகு ஆன்லைன் கற்றல் மற்றும் ஹைபிரிட் வடிவங்களின் பின்னணியில் அமைக்கப்படும் போது, எங்கள் அணுகல் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை அமைப்புகள், வருகைக் கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் தொலைநிலைத் தேர்வின் போது முகத்தை அடையாளம் காணல் ஆகியவை கல்வித் துறைக்கு மிகவும் சுவாரஸ்யமாக உள்ளன, ”என்று NtechLab இல் தெற்காசியாவின் விற்பனை மற்றும் வணிக மேம்பாட்டு இயக்குனர் பாவெல் போரிசோவ் கூறினார்.

முகத்தை அடையாளம்  காணும் தொழில்நுட்பமானது, அரசாங்கங்களுக்கும் பாதுகாப்பு சேவைகளுக்கும் அதிக வேகத்துடனும் நம்பிக்கையுடனும் செயல்பட அதிகாரம் அளிக்கிறது. இது வீடியோ ஸ்ட்ரீம்களில் அதிக துல்லியமான, நிகழ்நேர முக அடையாளம் காணலைப் பயன்படுத்துகிறது. படங்களானது தேடப்படும் நபர்களின் தரவுத்தளத்துடன் ஒப்பிடப்படுகின்றன. ஏதேனும் பொருத்தம் இருந்தால், தளம் சட்ட அமுலாக்கப்பிரிவிற்கு உடனடியாகத் தெரிவிக்கும். ஒரு நபர் கேமராவின் முன் தோன்றியதிலிருந்து சட்ட அமுலாக்கப்பிரிவு சிக்னலைப் பெறுவது வரை முழு செயன்முறைக்கும் சில நொடிகளே எடுக்கும். இது சூழ்நிலைகள் உருவாகும்போது விரைவாக பதிலளிக்க உதவுகிறது.

சில்லறை விற்பனை நிலையங்கள், கண்காட்சி அரங்குகள், வர்த்தக மையங்கள் போன்ற வர்த்தக நிறுவனங்களுக்கு, பாலினம் மற்றும் வயது, வருகையின் சராசரி நீளம் மற்றும் பங்கேற்பாளர்கள் புதியவர்களா அல்லது வழக்கமான பார்வையாளர்களா என்பது உள்ளிட்ட வருகையாளர்களின் எண்ணிக்கையில் செறிந்த பார்வையாளர்களின் பகுப்பாய்வுகளை இத்தொழில்நுட்பம் வழங்க முடியும். அணுகல் கட்டுப்பாடு மற்றும் வருகை மேலாண்மை முறைமைகள் என்பன முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தின் மிகவும் பிரபல்யமான பயன்பாடாகும்.

NtechLab 2015 இல் நிறுவப்பட்டது. அதன் புவியியல் தடயத்தின் அடிப்படையில், இது உலகின் மிகப்பெரிய முக அடையாளம் காணும் அமைப்பு வழங்குநர்களில் ஒன்றாகும். இது தற்போது அஜர்பைஜான், இந்தியா, இந்தோனேஷியா, ரஷ்யா, தாய்லாந்து, உஸ்பெகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் வியட்நாம் உட்பட மத்திய கிழக்கு, வட ஆபிரிக்கா, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பா முழுவதும் 23 நாடுகளில் தொழிற்படுகின்றது. NtechLab இன் உலகளாவிய முக அடையாளம் காணும் மென்பொருள் நெட்வொர்க்குடன் 400,000 க்கும் மேற்பட்ட கேமராக்கள் இணைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு, மத்திய கிழக்கு நாடுகள் உட்பட, இறையாண்மை சொத்து நிதிகளின் சர்வதேச கூட்டமைப்பிலிருந்து $15 மில்லியன் முதலீட்டைத் தொடர்ந்து, நிறுவனம் தனது வளைகுடா பிரதிநிதி அலுவலகத்தை அபுதாபியில் திறப்பதாக அறிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டில், அமெரிக்க வர்த்தகத் திணைக்களத்தின் தேசிய தரநிலைகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (NIST) நடத்திய முக அடையாளம் காணும் விற்பனையாளர் தேர்வில் (FRVT)) NtechLab முதலிடம் பிடித்தது.

https://ntechlab.com/

ஊடகத் தொடர்பு:

அலெக்சாண்டர் தாமஸ்

தகவல் தொடர்பாடல் இயக்குநர்

+7 916 498 74 42

a.tomas@ntechlab.com