Sat, May8, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

இந்த 6 ராசிகளில் பிறந்த பெண்கள் ஆபத்தான அதிபுத்திசாலிகளாக இருப்பார்களாம்… உஷாரா இருங்க…!

உங்களுக்கு வாழ்க்கையில் கிடைக்கும் மிகப்பெரிய மற்றும் முக்கியமான பரிசு என்றால் அது உங்களின் புத்திசாலித்தனம்தான்.  புத்திசாலித்தனம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயத்தை குறிக்கும். வயதால் மட்டுமே ஒருவர் புத்திசாலியாகவிடுவார் என்று ஒருபோதும் கூற முடியாது, ஏனெனில் புத்திசாலித்தனம் வேறு, அனுபவம் என்பது வேறு.

புத்திக்கூர்மை என்பது அறிவு, அனுபவம் அல்லது பகுத்தறிவு மட்டுமல்ல, இது உள்ளுக்குள் இருக்கும் தேடல் அது எப்போதும் உங்களை விட்டு போகாது.

பொதுவாக அழகான பெண்களை அனைவருமே விரும்புவார்கள், ஆனால் பலரும் அறியாத விஷயம் என்னவெனில் முட்டாளாக இருக்கும் அழகான பெண்ணை யாரும் விரும்ப மாட்டார்கள்.

அழகான பெண்ணை விட புத்திசாலியான பெண் எப்போதும் கூடுதல் கவர்ச்சியானவர்கள், அவர்கள் எப்பொழுதும் நிலையான மரியாதை மற்றும் நேசிப்பை பெறுவார்கள். இந்த புத்திசாலித்தனம் என்பது சில ராசி பெண்களுக்கு இயற்கையாகவே கூடுதலாக இருக்கும். அவர்கள் யாரென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

thanusu

தனுசு – நகைச்சுவையான, கிண்டலான மற்றும் சுறுசுறுப்பான தனுசு ராசி பெண்கள் எப்போதும் உலகின் முக்கியமான புத்திசாலிகளில் ஒருவராக இருக்கிறார்கள். இந்த மாற்றத்தை விருமபக்கூடிய நெருப்பு அடையாளம் மேலும் கற்றுக்கொள்வதற்கும் உலகத்தைப் பற்றிய அறிவைப் பெறுவதற்கும் தீராத தாகத்தைக் கொண்டுள்ளது. இவர்கள் வெறும் ‘புத்தக புழுக்கள்’ அல்ல, தனுசு ராசி பெண்கள் உண்மையிலேயே அன்றாட வாழ்க்கை அனுபவங்களை அறிவார்ந்த செயல்களுக்கு பயன்படுத்துபவர்கள். எதிர்காலத்தை நம்பி நிகழ்காலத்தை இழக்கும் மூடத்தனத்தை இவர்கள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள்.

kannai

கன்னி – புத்திசாலி ராசிகளின் பட்டியலில் கன்னி ராசி இல்லாமல் அந்த பட்டியல் கண்டிப்பாக முழுமை பெறாது. கன்னி ராசி பெண்கள் எப்போதும் உங்களை முதல் சந்திப்பிலேயே தங்கள் செயல்களால் ஈர்த்து விடுவார்கள். இவர்கள் நன்றாக படிக்க விரும்புவதுடன் தன்னை சுற்றி நடக்கும் அனைத்து விஷயங்களையும் கூர்ந்து கவனிப்பார்கள், உலக நிகழ்வுகளை எப்போதும் தெரிந்து வைத்துக் கொள்ள விரும்புவார்கள். அவர்கள் பேசும் தலைப்புகளே இவர்களின் புத்திசாலித்தனத்தை நமக்கு உணர்த்தும். பாடல், நடனம், எழுத்து என எதுவாக இருந்தாலும் இவர்கள் ஆர்வத்துடன் அதில் இறங்கும்போது அதில் நிபுணத்துவம் பெறுவார்கள். இவர்களின் கொள்கைகளும், சிந்தனைகளும் எப்போதும் மற்றவர்களை ஈர்ப்பதாக இருக்கும்.

kumbam

கும்பம் – பரந்த மனப்பான்மை கொண்ட கும்ப ராசி பெண்கள் உண்மையில் புதிய விதிமுறைகள், சவால்கள் மற்றும் வாழ்க்கையின் போக்குகளை ஏற்றுக்கொள்வார்கள். இந்த இராசி அடையாளம் கிளர்ச்சியடைந்த யுரேனஸால் ஆளப்படுவதால், கும்பம் தற்போதுள்ள சமூக விதிமுறைகள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை ஒற்றைக் கையால் சவால் செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். இந்த சூரிய அடையாளம் பொதுவாக பலவிதமான ஆர்வங்களைக் கொண்டுள்ளது மற்றும் புதிய சிந்தனைகள் மற்றும் கருத்துக்களை விரும்புகிறார்கள். பெரிய மாற்றங்கள் மற்றும் புரட்சிக்கு இவர்கள் ஆரம்ப புள்ளியாக இருப்பார்கள்.

ரிஷபம் – காதல் மற்றும் அனைத்து விதமான பிரச்சினைகளைப் பற்றி உங்களுக்கு புத்திசாலித்தனமான ஆலோசனை தேவைப்பட்டால், கண்ணை மூடிக்கொண்டு ரிஷப ராசி பெண்களை நாடலாம். அவர்கள்ள் தனது அனுபவத்தையும் அறிவையும் மகிழ்ச்சியுடன் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். ரிஷப ராசி உள்ளார்ந்த அமைதி கொண்டவர்கள், கனிவு, தாராள குணம் மற்றவர்களுக்கு தன் அரவணைப்பைக் கொடுப்பது என புத்திக்கூர்மையையும் தாண்டி ரிஷப ராசி பெண்களிடம் எண்ணற்ற நற்பண்புகள் உள்ளது.

magaram

மகரம் – தீவிரமான சிந்தனை, அமைதி மற்றும் சமநிலை ஆகியவை மகரப் பெண் புத்திசாலித்தனமான இராசி அடையாளமாக மாற உதவுகின்றன. இந்த விவேகமுள்ளவர்கள் எப்போதும் உணர்வுபூர்வமாக செயல்படுகிறார்கள், சரியான முடிவுகளை எடுக்க இவை இவர்களுக்கு உதவுகிறது. மகர ராசிகள் பெண்கள் யாரையும் புண்படுத்தாமல் தனக்கான உலகத்தை உருவாக்குகிறார்கள். விதியின் பரிசுகளை அவர்கள் அமைதியாக ஏற்றுக்கொள்கிறார்கள். இறுதியில் அவர்கள் வாழ்க்கையிலிருந்து அவர்கள் விரும்பும் அனைத்தையும் பெறுவார்கள்.

மேஷம் – மேஷ ராசி பெண்கள் மிகவும் பொறுப்பானவர்கள் மற்றும் தங்களின் வாழ்க்கை தங்கள் கைகளில் மட்டுமே இருப்பதாக நம்புகிறார்கள். வாழ்க்கையில் அவர்கள் வழியில் வரும் அனைத்து சவால்களையும் அமைதியாக எதிர்கொள்கிறார்கள். இந்த ராசியில் பிறந்த பெண்கள் மகிழ்ச்சியுடன் மற்றவர்களுக்கு உதவுகிறார்கள், அவர்களை கவனித்து மகிழ்கிறார்கள். மேஷம் பெண்களும் இந்த உலகத்தை உணர முயற்சி செய்கிறார்கள், புத்தகங்களால் ஈர்க்கப்படுகிறார்கள், புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதையே இவர்கள் பொழுதுபோக்காக மாற்றிக்கொள்வார்கள்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x