Meenam | மீனம்

Pisces Today 28th November 2020

மீனம்

சுப தினங்கள்:  3rd, 7th, 11th, 19th, 22nd, 29th and 30th

அசுப தினங்கள்:  12th, 18th, 25th, 27th and 28th

மீன ராசி அன்பர்களுக்கு இது சிறந்த பலன் அளிக்கும் மாதம். உங்கள் விருப்பங்கள் யாவும் நிறைவேறும் மாதமாக இந்த மாதம் இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் செயல்கள் எல்லாவற்றிலும் வெற்றி காண்பீர்கள். நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வீர்கள். உங்கள் தகவல் தொடர்புத் திறன் உங்களுக்கு நம்பிக்கை அளிக்கும். நிலுவையில் வைத்திருக்கும் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து அவற்றை முடியுங்கள். உங்களில் சிலர் குடும்பத்துடன் சேர்ந்து வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள். இது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணங்களாக அமையும். கலைஞர்கள் மற்றும் வியாபாரிகள் அரசாங்கம் மூலம் ஆதாயம் காண்பார்கள். உங்கள் மனதில் அகந்தைக்கு இடம் அளிக்காதீர்கள். உங்கள் ஆரோக்கியம் இந்த மாதம் நன்றாக இருக்கும்.

உங்கள் உறவினர்கள் உங்கள் காதல் உறவுக்கு எதிர்ப்பும் மறுப்பும் தெரிவிப்பார்கள். எனவே நீங்கள் உங்கள் குடும்பத்தினரிடம் சரியான தருணம் பார்த்து உங்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும் வகையில் உங்கள் காதலை வெளிப்படுத்துங்கள். அதன் மூலம் நீங்கள் உங்கள் பெற்றோரின் அனுமதி பெற்று உங்கள் காதலை திருமண உறவாக மாற்றிக் கொள்ள இயலும்.

பண வரவும் பணப் புழக்கமும் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். உங்களில் சிலர் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தேவைப்படும் பண உதவியைச் செய்வீர்கள். அவர்களும் உங்களிடம் நன்றி மறவாதவர்களாக இருப்பார்கள். நீண்ட கால முதலீடுகளை மேற்கொள்ள இந்த மாதம் உங்களுக்கு ஏற்ற மாதமாக இருக்கும். ஊக வணிகம் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. அசையாச் சொத்து பராமரிப்பு வகையில் செலவினங்களை நீங்கள் சந்திக்க நேரும்.

பணி புரியும் மீன ராசி அன்பர்களின் எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும். முன்னேற்றங்கள் ஏற்படும். பணியிடத்தில் சிறப்பாக செயலாற்றி ஊக்கத் தொகை பெறுவார்கள். சக பணியாளர்களிடம் நீங்கள் காட்டும் நட்புணர்வும், பழகும் தன்மையும் உங்களுக்கு பல நன்மைகளை பெற்றுத் தரும். அலுவலக பணி நிமித்தமாக நீங்கள் பயணங்களை மேற்கொள்ள நேரும்.

உங்கள் தொழில் குறித்து நீங்கள் தீட்டும் திட்டங்கள் யாவும் சிறப்பாக நிறைவேறும். அதன் மூலம் நீங்கள் பெயரும் புகழும் பெறுவீர்கள். புதிய தொழில் கிடைக்கும். நீங்கள் கூட்டுத் தொழில் செய்பவராக இருந்தால் உங்கள் வேலை விரைந்து முடிவு பெற உங்கள் கூட்டாளிகளையும் இணைத்துக் கொண்டு பணியாற்றுங்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவும் தொழில் மூலம் லாபமும் காண்பீர்கள்.

பணி புரியும் மீன ராசி அன்பர்களின் எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும். முன்னேற்றங்கள் ஏற்படும். பணியிடத்தில் சிறப்பாக செயலாற்றி ஊக்கத் தொகை பெறுவார்கள். சக பணியாளர்களிடம் நீங்கள் காட்டும் நட்புணர்வும், பழகும் தன்மையும் உங்களுக்கு பல நன்மைகளை பெற்றுத் தரும். அலுவலக பணி நிமித்தமாக நீங்கள் பயணங்களை மேற்கொள்ள நேரும்.

இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் சிறப்பாக பராமரிப்பீர்கள். நீங்கள் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் இருப்பீர்கள். வெளியிடங்களுக்கு சென்று வருவதன் மூலமும் உங்கள் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். யோகா, தியானம் போன்ற பயிற்சி மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் நன்கு பராமரிக்கலாம்.

மீன ராசி மாணவர்கள் இந்த மாதம் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நீங்கள் கவனமுடன் படித்து பாடங்களை கற்று முடிப்பீர்கள். மேலும் சக மாணவர்களுடன் கூட்டாக படித்து நீங்கள் அறிந்தவற்றை அவர்களுக்கு விளக்கி உங்கள் அறிவைப் பகிர்ந்து கொள்வர்கள். விளையாட்டு போன்ற கல்வி சாரா நிகழ்ச்சிகளிலும் நீங்கள் ஆர்வம் காட்டுவீர்கள். அவற்றில் பங்கு கொள்ளவும் ஆசிரியர்களால் நீங்கள் தெரிவு செய்யப்படுவீர்கள்.

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை. (குறள் எண்: 03)

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

11/18/2020 

புதன்கிழமை

நல்ல நேரம்

9.15-10.15; 4.45-5.45

எமகண்டம்

காலை 7.30-9.00

இராகு காலம் 

மதியம் 12.00-1.30

மேஷம்

நலம்

ரிஷபம்

பெருமை

மிதுனம்

மறதி

கடகம்

நட்பு

சிம்மம்

அமைதி

கன்னி

சாந்தம்

துலாம்

கஷ்டம்

விருச்சிகம்

நன்மை

தனுசு

கோபம்

மகரம்

புகழ்

கும்பம்

சாதனை

மீனம்

இன்பம்