Thu, May13, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

மகரம்

சுப தினங்கள்:  1, 2, 3, 4, 11, 12, 13, 16, 19, 20, 22, 21, 30, 31

அசுப தினங்கள்:  5, 6, 7, 8, 9, 10, 14, 15, 17, 18, 23, 24, 25, 26, 27, 28, 29

மகர ராசி அன்பர்கள் இந்த மாதம் பல மாற்றங்களைக் காண்பார்கள். உங்கள் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பொருளாதாரம் சீராக இருக்கும். நீங்கள் துடிப்புடனும் உற்சாகத்துடனும் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். உங்கள் அர்ப்பணிப்பு உணர்வும் உங்கள் வெற்றிக்கு வழி வகுக்கும். தன்னம்பிக்கையே உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும். உங்கள் உடன்பிறப்பு மூலம் உதவி பெறுவீர்கள். ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஆலோசனைகளைக் கேட்பதன் மூலம் நீங்கள் சிறந்த பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் கடன்களை தீர்க்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மகர ராசி மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள்.

காதல் உறவில் சில குழப்பங்கள் இருக்கும். கணவன் மனைவி பரஸ்பரம் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் நல்லிணக்க உறவு மேற்கொள்ள முடியும். திருமணம் குறித்த முடிவுகளை நீங்கள் கவனமுடன் எடுக்க வேண்டும்.

கடன் பிரச்சினைகள் உங்களைச் சூழ்ந்து அழுத்தும். இந்தமாதம் அதிக லாபங்கள் கிட்டாது. இது உங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும். என்றாலும் இது தற்காலிகமான ஒன்று என்பது உங்களுக்கு சற்று ஆறுதலான விஷயமாக இருக்கும். இந்த மாதம் நீங்கள் ஆடம்பர செலவுகளை தவிர்த்து அத்தியாவச செலவுகளை மேற்கொள்ள வேண்டும்.

பணியில் உங்கள் படைப்பாற்றல் வெளிப்படும். உங்கள் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் நல்லுறவு காணப்படும். நீங்கள் புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர் என்றால் உங்கள் சொந்த ஊரில் வேலை கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் வளரச்சியில் நீங்கள் சிறு சிறு தடைகளை சந்திக்க நேரும் என்பதால் பொறுமை தேவை.

நீங்கள் உங்கள் திறமை மற்றும் உள்ளுணர்வை சிறந்த முறையில் பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே தொழிலில் குறிப்பாக கூட்டுத் தொழிலில் வெற்றி காண இயலும். ஏனெனில் கூட்டாளிகளுடனான உங்கள் ஆலோசனைகள் சில சமயம் சில ஏமாற்றங்களை அளிக்கும். வெளிநாடு தொடர்புடைய தொழில் செய்பவர்கள் தொழிலை சிறிது கவனமுடன் கையாள வேண்டும்.

உங்களிடம் புதிய பொறுப்புகள் ஒப்படைக்கப்டும். இதனால் பணிச்சுமை அதிகமாக இருப்பது போல உணர்வீர்கள். தொழிலில் சில போட்டியாளர்களை நீங்கள் சந்திக்க நேரும். பழிவாங்கும் எண்ணத்துடன் செயல்படாதீர்கள்.

உங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. வயிறு மற்றும் தலை சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும். என்றாலும் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் அளவிற்கு பெரியதாக இருக்காது. பணிச்சுமை காரணமாக தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் உணர்ச்சிகளை கட்டுபடுத்துவதன் மூலம் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தைக் காத்துக் கொள்ளலாம். சத்தான உணவு, உடற்பயிற்சி மற்றும் இறை வழிபாடு மூலம் நீங்கள் உங்கள் திடமான ஆரோக்கியத்தைக் காத்துக் கொள்ளலாம்.

மாணவர்கள் இந்த மாதம் சிறந்த பலன்களைக் காண்பார்கள். நீங்கள் புதிய இலக்குடன் செயல்படுவீர்கள். உங்கள் கனவுகள் யாவும் நிறைவேறும். உங்கள் பெற்றோர், மற்றும் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உயர் கல்வி படித்து முடிக்கும் நிலையில் இருக்கும் மாணவர்கள் வேலை கிடைக்கப் பெறுவீர்கள்.

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

x