மாறன் விமர்சனம்: தனுஷால்கூட காப்பாற்ற முடியவில்லை

தனுஷின் தோற்றம்கூட நம்மை உற்சாகப்படுத்த முடியாத அளவுக்கு சாதாரணக் காட்சிகள். கார்த்திக் இரண்டு அற்புதமான நடிகர்களான அமீர் மற்றும் தனுஷ் ஆகியோரை ஒரே காட்சியில் நடிக்க வைத்துள்ளார்.

மாறன் விமர்சனம்: தனுஷால்கூட காப்பாற்ற முடியவில்லை

இயக்குனர் கார்த்திக் நரேன், பத்திரிகை உள்ளே நடைபெறும் வேலை பற்றிய எந்த உண்மையான அறிவும் இல்லாமல் மாறனை ஒரு பத்திரிகையாளனாக உருவாக்கியுள்ளார்.

யதார்த்த உலக அனுபவம் எதுவும் இல்லாமல், ஒரு உண்மையான பிரச்சினையில் நாற்காலியில் அமர்ந்துகொண்டு ஆய்வு செய்பவர் வழங்கிய தீர்ப்புக்கு இந்தப் படம் ஒரு சிறந்த உதாரணம்.

செய்தி ஆசிரியர்கள் கூட்ட அறையில் அமர்ந்து, உண்மை அடிப்படையிலான செய்தி மற்றும் பொதுமக்களுக்கு முக்கியமான பிரச்சினைகளைவிட பிரபலங்களின் காதல் விவகாரங்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்று கருதுவது மிகவும் அப்பாவித்தனமாக உள்ளது. 

மேலும், ஒரு நேர்மையான பத்திரிக்கையாளரின் அட்டைப் பட செய்தி கட்டுரைக்கு போட்டி இதழ்கள் அல்லது தொலைக்காட்சி செய்தி சேனல்கள் தாராளமாக பாராட்டு தெரிவித்து வெகுமதி அளிக்கப்படும் என்று நினைப்பது சற்று அதிகம்தான். இந்த விசித்திரக் கதையிலிருந்து விடுபட்ட ஒரே விஷயம் கொண்டாட்டம் மட்டும்தான்.

தனது துணிச்சலான செய்தியால் கோபமடைந்த ஒரு கும்பலால் கொல்லப்பட்ட தனது பத்திரிகையாளர் தந்தையின் கொலைக்கு சிறுவன் மதிமாறன் சாட்சியாகிறான்.

மாறன் (தனுஷ்) தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நேர்மையான பத்திரிகையாளராக மாறுகிறார். அவர் ஒரு பெரிய ஊடக நிறுவனத்தில் சேர்கிறார். சிறிது நேரத்தில் ஒரு பிரபலமான பத்திரிகையாளராக மாறுகிறார். இடைத்தேர்தலில் வெற்றிபெற வாக்கு இயந்திரங்களைக் கையாள விரும்பும் ஊழல் மற்றும் அதிகார வெறி கொண்ட அரசியல்வாதிகளை ஸ்டிங் ஆபரேஷன் செய்யும் போது பல பிரச்னைகளை சரி செய்ய முயற்சிக்கிறார்.

மாறன் பயமின்றி அவரைப் பற்றி ஒரு செய்தியை வெளியிடுகிறார். மேலும், பிரச்னைகளுக்கு இலக்காகிறார். அவனுடைய நேர்மை அவனது ஒரே சகோதரியை வேட்டையாடுகிறது. அவள் எதிரிகளால் பிடிக்கப்படுகிறாள். அவனுடைய சகோதரியின் கொடூரமான முடிவைக் கண்ட பிறகு, மாறன் ஒரு பழிவாங்கும் முடிவெடுக்கிறான். எனவே, அவன் இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்திய மனிதனைக் கண்டுபிடிக்க தனது விசாரணையைத் தொடங்குகிறான்.

இந்த படத்தில் தனுஷ் வரும்போதுகூட நம்மை உற்சாகப்படுத்த முடியாத அளவுக்கு சாதாரணக் காட்சிகள். கார்த்திக் இரண்டு பிரமாதமான நடிகர்கள் அமீர் , தனுஷ் ஆகியோரை ஒரு காட்சியில் கொண்டு வருகிறார். ஆனால், எந்த விதமான தாக்கத்தையும் உருவாக்க முடியவில்லை. இது எப்படி சாத்தியமானது?

மாறன் படத்தின் தயாரிப்பாளர்கள் அதை நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியிட்டு சரியான தேர்வை மேற்கொண்டுள்ளனர். இந்தப் படத்தைப் பார்க்க தியேட்டருக்குச் செல்லும் முயற்சியை விரும்பமாட்டீர்கள். 

ஓ.டி.டி.-யில் வெளியிடுவதால் சந்தா மூலம் செலவு மற்றும் பிரச்சனையின்றி அதைப் பார்க்க முடியும் என்பதால், தியேட்டருக்கு செல்ல விரும்பாமல் இருக்கலாம். நீங்கள் ஓய்வாக இருக்கும் ஒரு மதிய நேரத்தில், தூக்கம் வராதபோது கைகொடுக்கும் படம்தான் இந்த மாறன் திரைப்படம்.