லிட்ரோ எரிவாயு விலை இன்று முதல் அதிகரிப்பு

லிட்ரோ எரிவாயுவின் விலையை இன்று (05) முதல் அதிகரிக்க நிறுவனம் தீர்மானித்துள்ளது.

லிட்ரோ எரிவாயு விலை இன்று முதல் அதிகரிப்பு

லிட்ரோ எரிவாயுவின் விலையை இன்று (05) முதல் அதிகரிக்க நிறுவனம் தீர்மானித்துள்ளது.

எரிவாயு சிலிண்டரின் விலை 334 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக இதன் புதிய விலை 4,743 ரூபாயாகும். 5 கிலோகிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு விலை 134 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இதன் புதிய விலை 1,904 ரூபாயாகும். 2.3 கிலோகிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு விலை 61 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இதன் புதிய விலை 883/= ரூபாயாகும்.