சீனாவுடன் அமைதி பேச்சுவார்த்தை தொடரும்: மத்திய அரசு தகவல்

லடாக் மோதலால் இந்தியா-சீனா எல்லையில் நிலவும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வந்து, அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இதில் கடைசியாக இருநாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே 8-வது சுற்று பேச்சுவார்த்தை கடந்த 6-ந்தேதி நடந்தது.

இந்த நிலையில் லடாக் எல்லையில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக இருதரப்பும் பேச்சுவார்த்தைகளை தொடரும் என மத்திய அரசு கூறியுள்ளது.

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா நேற்று கூறுகையில், ‘இரு நாடுகளும் தூதரகம் மற்றும் ராணுவம் மூலம் தொடர்பையும், பேச்சுவார்த்தையையும் தொடர ஒப்புக்கொண்டுள்ளன.

அங்கு படைகளை விலக்கி அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை விரைவில் நடத்தவும் முடிவு செய்துள்ளன’ என்று தெரிவித்தார்.

லடாக்கில் இருந்து இந்திய வீரர்களை வெளியேற்ற சீன ராணுவம் நுண்ணலை ஆயுதங்களை பயன்படுத்தியதாக இங்கிலாந்து நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டு இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அந்த தகவல்கள் ஆதாரமற்றவை எனவும், இது குறித்து ராணுவம் ஏற்கனவே தெளிவுபடுத்தி இருப்பதாகவும் உறுதிபட தெரிவித்தார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
0
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
Oxford-Covid-vaccine-could-build-immunity-in-olde

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி முதியோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் - ஆய்வில் தகவல்

Next Article
கொரோனா

இறுதியாக உயிரிழந்தவர் தொடர்பில் வெளியான தகவல்

Related Posts
டிரம்ப்
Read More

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவாரா டொனால்ட் டிரம்ப்?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான தேர்தல் சபை வாக்குகளை ஜோ பைடன் பெற்றிருந்தாலும், அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த இரு வாரங்களில்…
நிவர் புயல்
Read More

“நிவர் புயல் இன்னும் 1 மணி நேரத்தில் புதுச்சேரி அருகே கரையை கடக்கும்”

நிவர் புயல் புதன்கிழமை இரவு 10 மணி நிலவரப்படி புதுச்சேரி அருகே அடுத்த 1 மணி நேரத்தில் கரையை கடக்கலாம் என்று கணித்துள்ளதாக இந்திய…
Read More

மொபைல் செயலிகளுக்கு இந்தியா தடை ; சீனா கடும் எதிர்ப்பு

இந்தியா ஒருமைப்பாட்டிற்கு விரோதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கருத்துக்களை ஊக்குவிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டதாக AliExpress, Alibaba உள்ளிட்ட 43 மொபைல் செயலிகளுக்கு தடைவிதித்து…
Total
0
Share