Thu, May13, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

கும்பம்

சுப தினங்கள்:  7, 6, 8, 9, 10, 11, 21, 27, 28, 16, 17, 18, 19, 20, 22

அசுப தினங்கள்:  1, 2, 3, 4, 5, 12, 13, 14, 15, 23, 24, 25, 26, 29, 30, 31

கும்ப ராசி அன்பர்கள் இந்த மாதம் சிறப்பாக இருப்பதாக உணரக் கூடிய வகையில் இருக்கும். சிறந்த வகையில் வருமானம் ஈட்ட இயலும். வேலை செய்யும் கும்ப ராசி அன்பர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு தாமதமாகும். உங்களில் சிலருக்கு புதிய வேலைக்கான பொறுப்பு வந்து சேரும். இந்த வேலை உங்களுக்கு திருப்பு முனையாக இருக்கும். நீங்கள் சிறப்பாக பணியாற்றுவதன் மூலம் பதவி உயர்வு பெறும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சில சலசலப்புகள் ஏற்படும். வதந்தி, புரளி போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். உங்களுக்கு ஆன்மீக ஈடுபாடு அதிகமாகும். மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

காதல் உறவில் சில பதட்டமான நிலை இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணைக்கென நீங்கள் அதிக பணத்தை செலவு செய்வீர்கள். எனவே பணம் செலவாகும் விஷயத்தில் உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். எனவே நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் உடன் பிறப்புகளுடனான உறவு சிறப்பாக இருக்கும்.

இந்த மாதம் உங்களிடம் போதிய பணம் இருக்கும். நீங்கள் பணத்தை சேமிப்பீர்கள். வரவும் செலவும் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் கடன்களை நீங்கள் எளிதில் அடைப்பீர்கள். இந்த மாதம் உங்கள் நிதிநிலை சீராகவும் ஓரளவு செழிப்பாகவும் இருக்கும்.

நீங்கள் தைரியமாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். பணியிடத்தில் சிலர் உங்களுக்கு போட்டியாக இருப்பார்கள். என்றாலும் நீங்கள் அவர்களை வெற்றி கொள்வீர்கள். பணியில் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். பணியிடத்தில் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் தகவல்களைப் பெறுவீர்கள்.

தொழிலை ஆரம்பிக்க இது உகந்த மாதமாக இருக்கும். எனவே நீங்கள் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தால் இது உங்களுக்கு ஏற்ற நேரமாக இருக்கும். வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் உள்ளவர்கள் என்றால் உங்கள் தொழில் சிறப்பாக நடைபெறும். என்றாலும் சில தடைகளையும், ஏமாற்றங்களையும் நீங்கள் சந்திக்க நேரும். நீங்கள் நம்பிக்கையுடனும் விடா முயற்சியுடனும் செயல்பட வேண்டும்.

கும்ப ராசி தொழில் வல்லுனர்கள் சில புதிய உத்திகளைக் கையாண்டு மேலதிகாரிகளை மகிழ்ச்சிக்கு உள்ளாக்குவீர்கள். இதன் மூலம் உங்கள் பணிக்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்று நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். சக பணியாளர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். நீங்கள் சிறப்பாகச் செயலாற்றி மேலதிகாரிகளின் பாராட்டையும் பரிசையும் பெறுவீர்கள்.

உங்கள் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். எனவே உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உங்களில் சிலருக்கு உணவு ஒவ்வாமை காரணமாக வாயுத் தொல்லைகள் ஏற்படும். எனவே, முறையான உணவு முறையை பின்பற்றியும், உடற்பயிற்சி மேற்கொண்டும் உங்கள் ஆரோக்கியத்தைக் காத்துக் கொள்ளுங்கள்.

எந்தவொரு குறுக்கு வழியையும் நீங்கள் நாடுவது கூடாது. வெளிநாடு சென்று படிக்க நினைக்கும் மாணவர்கள் கடின உழைப்பின் மூலம் தங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பார்கள். வெளிநாடு செல்ல தகுந்த நபர்களுடன் அல்லது முகவர்களுடன் தொடர்பு கொண்டு செயலாற்றுங்கள். போலி நபர்களிடம் ஏமாந்து போகாதீர்கள். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அறிவுரைகளைத் தட்டாதீர்கள்.

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

x