சக வீராங்கனையை மணந்த பெண்; திருமணமான 20வது நாளில் முக்கிய அறிவிப்பு

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீராங்கனை கேத்தரீன் ப்ருண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

சக வீராங்கனையை மணந்த பெண்; திருமணமான 20வது நாளில் முக்கிய அறிவிப்பு

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீராங்கனை கேத்தரீன் ப்ருண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

36 வயதான கேத்தரீன் சிறந்த பந்துவீச்சாளராக திகழ்ந்தார். 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 51 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கேத்தரீன் அறிவித்துள்ளார். 18 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் விளையாடி வந்திருந்தார்.

ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து அவர் விளையாடுவார். கேத்தரீன் கடந்த ஆகஸ்ட் 2004 இல் தனது 19வது வயதில் நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.

சமீபத்தில் தான் சக வீராங்கனை நடாலி ஸ்கீவருக்கும், கேத்தரீனுக்கும் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் திருமணம் நடைபெற்ற 20 நாளில் தனது ஓய்வு முடிவை கேத்தரீன் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW