Sun, Feb28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

கன்னி

சுப தினங்கள்:  4, 5, 6, 7, 15, 16, 17, 12, 13, 14, 21, 22, 24, 28, 29, 30, 31

அசுப தினங்கள்:  1, 2, 3, 8, 9, 10, 11, 18, 19, 20, 23, 25, 26, 27

இந்த மாதம், கன்னி ராசி அன்பர்களின் கவனம், குறிப்பாக, குடும்ப வாழ்க்கை, குடும்ப விஷயங்கள் இவற்றின் மீது இருக்கும் எனலாம். மேலும், மன நலம், உணர்வு பூர்வமான நல்வாழ்வு போன்றவற்றின் மீதும், அவர்கள் கவனம் செலுத்தக்கூடும். நிதிநிலை, வேலை போன்றவற்றிலிருந்தும் கூட அவர்கள் கவனத்தைத் திருப்பி, குடும்பம் தொடர்பான விஷயங்களைச் சீர்செய்வதில் தீவிரமாக இருக்கக்கூடும். ஏனெனில், ‘பண விஷயங்கள் காத்திருக்கலாம், ஆனால் குடும்ப விஷயங்கள் காத்திருக்காது; பணத்தை இழந்தாலும் அதை மீண்டும் சம்பாதித்து விடலாம், ஆனால் அன்பு தொலைந்து போனால், அதை மீட்பது கடினம்’ போன்றவற்றை நீங்கள் உணரக்கூடும். இதை அனவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஆசைப்படும் நீங்கள், உங்களுடன் கூட, அனைவரும், சிரித்து, சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றும் விரும்புவீர்கள். இந்த மாதம், இதுவே உங்களது முக்கிய நோக்கமாக இருக்கக் கூடும்.

உங்கள் காதல் உணர்வுகள் ஆழமாக இருக்கக் கூடும். சுக்கிரன் மற்றும் செவ்வாய் கிரகங்களின் இணைந்த தாக்கம், காதலையே ஒரு புதிர் போல மாற்றி விடும் சாத்தியமும் உள்ளது. ஒருவரது அன்பைப் பெறுவதற்கு, சுய நம்பிக்கை, துணிவு போன்றவை இன்றியமையாதவை என்றாலும், அளவிற்கு அதிகமான தன்னம்பிக்கை, அகம்பாவம் போன்றவை, உறவைக் கெடுத்து, அதை முறித்தும் விடக்கூடும் என்பதை நீங்கள் உணரக்கூடும். தவறான புரிந்துணர்வுகள் எந்த உறவிலும் எழ வாய்ப்புள்ளது. ஆனால், இரண்டு பேருக்கும் ஏற்புடைய வகையில் சமரசம் செய்து, பிரச்சனைக்கு, நீங்கள் தீர்வு காண்பது அவசியம். இந்த மாதம், உங்களில் சிலர், இது போன்ற தீர்வுகளை அடைய முயற்சிப்பீர்கள். பேசிப் பழகுவீர்கள். உங்கள் செயல்கள் யாவும் இந்த மாதம் சிறந்த நல்ல பலன்களை அளிக்கும். நீங்கள் விருந்து விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள்.

உங்கள் வாழ்க்கைத் துணைவரின் பெற்றோர் போன்றவர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் எழலாம். குடும்ப செலவுகள் குறித்து கடுமையான வாக்குவாதம் எழவும் வாய்ப்புள்ளது. இவை உங்களுக்குப் பல பிரச்சனைகளை உருவாக்கலாம். ஆனால், பணத்தை எவ்வாறு முறையாகப் பயன்படுத்துவது, எவ்வாறு எதிர்காலத்திற்குச் சேமிப்பது போன்றவை குறித்து, மூத்தவர்களின் அறிவுரை உங்களுக்குக் கிடைக்கும். ஆரம்பத்தில் உங்கள் குழந்தைகள் உங்கள் சொற்களை ஏற்றுக்கொள்ளா விட்டாலும், இதே அறிவுரையை, நீங்கள் அவர்களுக்கும் அளிப்பீர்கள். மூத்தவர்கள் மீது மரியாதை காட்டுமாறு உங்கள் குழந்தைகளைப் பழக்குங்கள். இதன் மூலமே அவர்கள் வெற்றி பெற முடியும் என்பதையும் அறிவுறுத்துங்கள். பரஸ்பர அன்பு, மரியாதை போன்றவற்றின் மூலமாகவே, குடும்பத்தில் அன்பையும், இணக்கத்தையும் உருவாக்க முடியும். வயதில் மூத்தவர்கள், பண விஷயங்களிலும், குடும்பத்தை நடத்துவதிலும் அனுபவம் வாய்ந்தவர்கள் ஆவர். ஆகவே, தேவைப்படும் நேரங்களில், அவர்கள் அறிவுரைகளைக் கேட்டு, அவர்களின் வழிகாட்டுதல்களின் படி நடப்பது நன்மை தரும்.

இது, உங்கள் வேலைக்கு உகந்த மாதம் என்று கூறுவதற்கில்லை. உயரதிகாரிகள், உங்கள் பணிக்கு உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை என்று நீங்கள் நினைக்கக்கூடும். தங்களைப் பற்றிய சுய மதிப்பும், சிலருக்குக் குறைவாக இருக்கக் கூடும். வேலை தொடர்பான பயணங்களும், நீங்கள் விரும்பும் பலன்களை அளிக்காமல் போகலாம். இந்த மாதம், புதன் மற்றும் சுக்கிர கிரகங்கள் இருக்கும் நிலையில், நீங்கள், வீட்டிலிருந்தபடியே பணிபுரிவதற்கான வாய்ப்புகளைப் பெற முயற்சிப்பீர்கள். இதன் முலம் குடும்பத்துடன் சிறிது நேரம் செலவிட விரும்புவீர்கள். நீங்கள் மிகக் கடுமையாக உழைத்துள்ளீர்கள். எனவே, இப்பொழுது உங்கள் விருப்பப்படி பணியாற்ற விரும்புவீர்கள்.

இந்த நேரத்தில், தொழில் ஒப்பந்தங்கள் லாபகரமாக இல்லாமல் போகலாம்; அதே நேரம், சில ஒப்பந்தங்கள் உங்களுக்கு பாதகமாகவும் கூட இருக்கலாம். தொழில் நடவடிக்கைகளிலும், பயணங்களிலும் வெற்றி பெறுவதற்கு, நீங்கள் போராட வேண்டியிருக்கலாம். ஆனால் இளைய உடன்பிறப்புகள், அல்லது குடும்பத்தினர், அல்லது உறவினர் உதவியால், சிலருடைய தொழில், அதிர்ஷ்டகரமாக அமையக்கூடும். இந்தக் காலகட்டத்தில், எந்தக் காரணத்திற்காகவும், ஏதாவது ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டியிருந்தால், ஆவணங்கள் அனைத்தையும் கவனமாக சரிபார்க்கவும். ஏனெனில், இதில் ஏதாவது சிறிய கவனக்குறைவு ஏற்பட்டாலும், அதன் காரணமாக பிற்காலத்தில் பிரச்சனைகள் எழ வாய்ப்புள்ளது.

கன்னி ராசி தொழில் வல்லுநர்கள், பிறரைக் கவர்ந்திழுக்கும் ஆற்றல் கொண்டவர்கள். இது, குறிப்பாக, ஊடகத்துறை அல்லது பொழுது போக்குத்துறையில் உள்ளவர்களுக்கு உதவிகரமாக இருக்கும். ஆயினும், பொதுவாக, உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள், உங்களை போட்டியாளராகக் கருதி, உங்களுக்கு சில இடையூறுகளை உருவாக்கக் கூடும். பயணங்களால் சில சவால்களும் எழக்கூடும். அதே நேரம், அவை இன்பமும் தரக்கூடும். சிலர் உள்நாட்டு அல்லது வெளிநாட்டுப் பயணம் மேற் கொள்ளக்கூடும்; அல்லது அவர்கள் மாநிலத்திற்குள்ளாவது பயணம் செய்யக்கூடும்.

மன அழுத்தம், குடும்பத்தில் ஏற்படும் பதட்டம் காரணமாக, சிலருடைய ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படலாம். உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலையும், உங்கள் உடல்நிலையை பாதிக்கலாம். வாழ்க்கைத் துணைவரின் குடும்பத்தினரும், உங்களுக்கு மன அழுத்தம் தரலாம். அவர்களும் சில நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கலாம்; அதன் காரணமாக உங்கள் உடல் மற்றும் உணர்வு ரீதியான ஆதரவை எதிர்பார்க்கலாம். இவை அனைத்தும் உங்களை சோர்வடையச் செய்யக்கூடும். ஒருபுறம், நீங்கள் கடுமையாக உழைக்க விரும்புவீர்கள்; மறுபுறம், உங்கள் உடல், உங்களை ஓய்வெடுத்துக் கொண்டு, உல்லாசப் பயணம் செல்லுமாறு கூறும். எனவே கடுமையான பணிச்சுமையைத் தவிர்த்து, உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சத்தான உணவு உட்கொள்வதும், தினமும் மூச்சுப் பயிற்சி செய்வதும், அமைதி பெறவும், ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளவும் உதவும்.

மாணவர்களுக்கு இது சாதகமான காலமாக இருக்கக்கூடும். அவர்களுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலம் காத்திருப்பதாகவும், அவர்கள் நினைக்கக்கூடும். அவர்கள் காட்டும் ஆர்வம், அவர்களது கல்விக் குறிக்கோள்களை அடையச் செய்யும். குறிப்பாக, பொறியியல் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வாய்ப்புள்ளது. போட்டித் தேர்வுகளில் பங்கெடுத்துக் கொள்பவர்களும், ஒரளவு எளிதாகவே தேர்ச்சி பெறும் வாய்ப்புள்ளது. தியானம் செய்வதும், பாடங்களில் ஒருமுகப்பட்ட கவனம் செலுத்துவதும், நல்ல பலன்களைத் தரும்.

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

x