Vikram Movie Review : ஆண்டவர் ஆட்டம் வொர்த்தா?... வொர்த் இல்லையா?
கமல்ஹாசன், பகத் பாசில், சூர்யா, விஜய் சேதுபதி, நரேன், அர்ஜுன் தாஸ், காயத்ரி, காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் விக்ரம்.

கமல்ஹாசன், பகத் பாசில், சூர்யா, விஜய் சேதுபதி, நரேன், அர்ஜுன் தாஸ், காயத்ரி, காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் விக்ரம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு, ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவு ஆகியோர் பணியாற்றியுள்ள இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
தமிழில் உருவாகி உள்ள இப்படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். இப்படம் இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீசாகி உள்ளது.
அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்ட முதல் காட்சியை இயக்குனர் லோகேஷ் கனகராஜும், இசையமைப்பாளர் அனிருத்தும் ரசிகர்களுடன் இணைந்து பார்த்து மகிழ்ந்தனர்.
விக்ரம் படத்தின் முதல் பாதி முடிவடைந்துள்ள நிலையில், அதன் விமர்சனங்களும் டுவிட்டரில் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.
அதன்படி விக்ரம் படத்தின் முதல் பாதி குறித்து பதிவிட்டுள்ள நெட்டிசன் ஒருவர், இப்படம் முழுவதும் லோகேஷ் கனகராஜ் ஸ்டைலில் இருப்பதாகவும், விறுவிறுப்பும், ஆக்ஷன் காட்சிகளும் நிறைந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பகத் பாசில் மாஸ் காட்டி இருப்பதாக பதிவிட்டுள்ள அவர், விஜய் சேதுபதி தனக்கே உரித்தான பாணியில் நடித்திருக்கிறார். இப்போ தான் புரியுது கமல்ஹாசனை ஏன் உலகநாயகன் என கூப்பிடுறாங்கனு என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு நெட்டிசன் பதிவிட்டுள்ளதாவது : முதல் பாதியில் விஜய் சேதுபதி பயங்கர மாஸாக இருக்கிறார். அனிருத் பின்னணி இசையில் பின்னி பெடலெடுத்திருக்கிறார். முதல் பாதியில் கமல்ஹாசனுக்கு குறைவான காட்சிகளே இருந்தாலும் அவரின் இண்டர்வல் சீன் வெறித்தனமாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.
துபாயை சேர்ந்த ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ளதாவது : முதல் பாதி செம்மையாக இருப்பதாகவும், அனிருத்தின் பின்னணி இசை புல்லரிக்க வைக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேக்கிங் சூப்பராக இருக்கிறது. ஃபகத் பாசில், விஜய் சேதுபதி, கமல்ஹாசனின் நடிப்பு வேறலெவல். முதல் பாதி பிளாக்பஸ்டர் என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு ரசிகர் ஒருவர், படத்தின் முதல் பாதி உலகத்தரத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இன்னொருவரோ செஞ்சிருக்க மேன் நீ என இயக்குனர் லோகேஷ் கனகராஜை குறிப்பிட்டு பாராட்டி உள்ளார்.
இதன்மூலம் விக்ரம் படத்தின் முதல் பாதி செம்ம மாஸாக இருப்பதாக ஏராளமான ரசிகர்கள் தொடர்ந்து பதிவிட்ட வண்ணம் உள்ளனர். இப்படம் கமல்ஹாசனுக்கு பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.