Sat, Apr17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

கடகம்

சுப தினங்கள்:  4, 5, 6, 8, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 31

அசுப தினங்கள்: 1, 2, 3, 7, 9, 10, 11, 12, 13, 14, 26, 27, 28, 29, 30.

கடக ராசி அன்பர்கள் இந்த மாதம் நல்ல பலன்களைக் காண்பார்கள். உங்கள் தந்தை மற்றும் அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் சில பிரச்சினைகள் எழ வாய்ப்பு உள்ளது. தந்தை வழி உறவினர்களிடம் உறவை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவீர்கள். பணியிடத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் காக்கப்படும் உங்கள் தொழில் சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றினாலும் அது பெரிய அளவில் பாதிப்பை அளிக்காது. உங்கள் தோற்றத்தில் வனப்பு கூடும். வாழ்வில் முன்னேற்றம் கிட்டும். பிரச்சினைகள் அதிகம் இல்லாத மாதமாக இந்த மாதம் இருக்கும். இந்த மாதம் பணப் பிரச்சினைகள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை.

உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வாக்கு வாதத்தில் ஈடுபடாதீர்கள். உங்களின் பொன்னான நேரத்தை அவருடன் கலந்து உறவாடவும் ஒதுக்குங்கள். வேலை மாற்றம் தொடர்பான பேச்சி வார்த்தைகளில் கருத்து வேறுபாடு எழ வாய்ப்பு உள்ளது. நீங்கள் திறம்பட முடிவுகளை எடுக்கவும், உங்கள் திருமண வாழ்க்கை சிறக்கவும் கிரக நிலைகள் சாதகமாக உள்ளது.

இந்த மாதம் உங்கள் நிதிநிலை மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும். வீடு மராமத்து வகையில் செலவுகளை மேற்கொள்வீர்கள். பணியில் பதவி உயர்வு கிடைக்கும். அதனால் வருமானம் உயரும். தேவையற்ற எதிர்பாராத செலவுகள் உங்களுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும் இந்த மாதம் பணப்புழக்கம் அபரிமிதமாக இருக்கும். நீங்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்வீர்கள். என்றாலும் செலவுகளில் கவனம் தேவை. பிறருக்கு கடன் அளிக்கும் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

இந்த மாதம் நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள். வெளிநாடு சென்று வேலை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த மாதம் எதுவாக இருக்கும். குறிப்பாக அரசுத் துறை மற்றும் வங்கித் துறையில் இருப்பவர்களுக்கு. வேலை தேடுபவர்களுக்கு இந்த மாதம் வேலை கிட்டும். வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு காணப் பெறுவார்கள். .

இந்த மாதம் கூட்டுத் தொழில் உங்களுக்கு சிறந்த பலன்களை அளிக்கும். தொழில் சம்பந்தமான ஆவணங்களை நன்கு ஆராய்ந்து பின் கையொப்பமிடவும். வெளிநாட்டு கூட்டாளிகள் மூலம் புதிய தொழில் வாய்ப்பினைப் பெறுவீர்கள். அதன் மூலம் உங்கள் தொழிலை விரிவாக்க உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிட்டும்.

பணியிடத்தில் உணர்ச்சி வசப்படாதீர்கள். உங்கள் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைத்தாலும் நீங்கள் உங்கள் திறமையயை நிரூபிக்க வேண்டிய சூழல் இருக்கும். பனி சம்பந்தமான உங்கள் திட்டங்களை பிறருடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். நீங்கள் கூடுதல் பணிகளை மேற்கொண்டு அதற்குரிய அங்கீகாரமும் பெறுவீர்கள்.

 உங்கள் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். பெரிய அளவிலான உடல் நல பாதிப்புகள் ஏதும் இருக்காது. உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு உதவியாக இருப்பார். சோம்பலைக் கைவிட்டு நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தைத் தக்க வைத்துக் கொள்ள சிறிது முயற்சி மேற்கொள்ள வேண்டும். முறையான உணவும் தியானம் மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

கடக ராசி மாணவ மாணவியர்களுக்கு சென்ற மாதத்தை விட இந்த மாதம் பலன்கள் சிறப்பாக இருக்கும். என்றாலும் படிப்பில் கவனம் தேவை. விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பின் மூலம் நீங்கள் வெற்றி காண இயலும். கலைத் துறை மற்றும் படைப்புத் துறையில் இருக்கும் மாணவமணிகள் சிறப்பாக செயல்படுவார்கள். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் இந்த மாதம் அதனைக் கடினமாக உணர்வார்கள்.

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

x