Sun, Jan17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

கடகம்

சுப தினங்கள்:  1, 2, 3,7, 9, 10, 11, 12, 13, 14, 21, 22, 23, 26, 27, 28, 29, 30

அசுப தினங்கள்:  4, 5, 6, 8, 15, 16, 17, 18, 19, 20, 24, 25, 31

கடக ராசியினர் இந்த வருடம், சில போராட்டங்களைச் சந்திக்க நேர்ந்தாலும், வேலையைப் பொறுத்தவரை இது மிகச் சிறந்த வருடமாக அமையும். வருடத்தின் ஆரம்பத்தில் மற்றும் கடைசி கால் பகுதியில் குரு மற்றும் சனி உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார்கள். இந்தக் காலகட்டங்கள், வியாபாரம் மற்றும் தொழில் செய்வதற்கு ஏற்ற காலம் ஆகும். மேலும் செவ்வாய், மேஷம், விருச்சிகம், மற்றும் மகரத்தில் இருக்கும் போது உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். இந்த வருடம் உங்கள் சமூக அந்தஸ்து உயரும். நட்பு வட்டாரங்கள் பெருகும். அது உங்கள் வியாபாரத்தை விருத்தி செய்வதற்கு உதவும். வருடத்தின் ஆரம்பத்தில் நிதிநிலை சாதகமாக இருக்காது. மாணவர்களுக்கு இந்த வருடத்தின் சில மாதங்கள் வெற்றியை அளிக்கும் மாதங்களாக இருக்கும். பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை சாதகமான காலம் ஆகும். ஐந்தாம் வீட்டில் கேதுவின் சஞ்சாரம் காரணமாக உங்களுக்கு கவனச் சிதறல் ஏற்படும். எனவே நீங்கள் மனதை ஒருமுகப்படுத்தி கடினமாக உழைத்துப் படிக்க வேண்டும். குடும்பத்தைக் குறிக்கும் நான்காம் வீட்டை (உங்கள் ராசிக்கு நாலாம் வீடு) சனி பார்ப்பதால் குடும்ப வாழ்வில் சில சவால்களை சந்திக்க நேரிடும். எனவே குடும்பத்தில் சில பிரச்சினைகள் எழும். வேலை நிமித்தமாக நீங்கள் சில மாதங்கள் உங்கள் குடும்பத்தைப் பிரிய நேரும். சனி மற்றும் குரு உங்கள் ஏழாம் வீட்டில் சஞ்சரிப்பதின் காரணமாக, திருமண வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். சனி பகவான் காரணமாக பதட்ட நிலை இருந்தாலும், குரு பகவான் உங்களைக் காப்பார். பிப்ரவரி முதல் ஏப்ரல், செப்டம்பர் இடைப் பகுதி முதல் நவம்பர் வரை குடும்ப உறவுகள் சிறப்பாக இருக்கும். மற்ற மாதங்களில் நீங்கள் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். ரோக ஸ்தானம் என்று கூறப்படும் ஆறாம் வீட்டின் அதிபதி குருவுடன், சனி இணைந்து உங்கள் ஏழாம் வீட்டில் இருப்பதால் முட்டி மற்றும் இடுப்பு தொடர்பான உபாதைகள் ஏற்பட வாய்புள்ளது. பதினொன்றாம் வீட்டில் இருக்கும் ராகு உங்களுக்குப் பல நன்மைகளைச் செய்வார்.

சுக்கிர கிரகம், உங்களது 4 மற்றும் 5 ஆம் வீடுகளில் சஞ்சாரம் செய்வதால், இந்த மாதம், நீங்கள் உங்கள் உறவுகளை மேம்படுத்திக் கொள்ள முடியும். சுய முன்னேற்றம் குறித்து சிலருக்கு ஆர்வம் அதிகரிக்கும். மற்றவர்கள் உங்களைப் பற்றிப் பெருமையாக நினைக்க வேண்டும் என்பதில் நீங்கள் ஆர்வம் காட்டக்கூடும். திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையிடம் நம்பிக்கையூட்டும் வகையிலும், அவர்களை ஈர்க்கும் வகையிலும் நடந்து கொள்வார்கள். உங்கள் விதியைக் குறிக்கும் குரு கிரகம், 7 ஆம் வீட்டில், சனி கிரகத்துடன் இணைந்து இருக்கிறார். இந்த சேர்க்கை, உறவுகளை மேம்படுத்துவதற்காக உங்களைக் கடுமையாக உழைக்கத் தூண்டும். நீங்கள் அதற்குத் தகுதியானவராக இருந்தால், இது உங்களுக்கு நல்லதொரு தலைவிதியை ஏற்படுத்தித் தரக் கூடும்.

உங்கள் நிதிநிலையில் சில பிரச்சனைகள் எழலாம். குடும்ப செலவுகளும், சில தேவையற்ற செலவுகளும், இதற்கு முக்கிய காரணமாக இருக்கக் கூடும். ஆனால் உங்கள் செலவினங்களையும், முதலீடுகளையும் நீங்கள் கவனமாக ஆராய்ந்து, செலவுகளைக் கட்டுப்படுத்த புதிய வழிகள் குறித்து யோசித்தால், நிலைமையை உங்களால் நன்கு சமாளிக்க முடியும். இதன் மூலம், உங்கள் பொருளாதார நிலை படிப்படியாக மேம்படும். ஆனால் டிசம்பர் மாத மத்திய காலம் வரை, உங்கள் 2 ஆம் வீட்டின் அதிபதியான சூரியன், 6 ஆம் வீட்டில் சஞ்சரிப்பது குறித்து, நீங்கள் கவனத்துடன் இருப்பது அவசியம். குறிப்பாக, நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ பணம் கடன் கொடுக்க நேர்ந்தால், எச்சரிக்கை தேவை.

வேலையைப் பொறுத்தவரை, இதை ஒரு சிறந்த மாதம் என்று கூறமுடியாது; அதே நேரம், இது உங்களுக்கு ஒரு மோசமான மாதமாகவும் இருக்காது. பணி தொடர்பாக, சிலர், பல பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் இவற்றால் நீங்கள் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் வருத்தப்படக் கூடும். தொடர்ந்து பயணங்கள் செல்வதனால், உங்களுக்கு உடல் சோர்வும் ஏற்படலாம். எனவே உங்கள் வேலை முன்னேற்றத்திற்கு உதவக்கூடிய பயணங்களை மட்டும் மேற்கொள்ளுங்கள்; உயரதிகாரிகளைத் திருப்திப்படுத்துவதற்காகவே பயணம் செல்வதைத் தவிர்த்து விடுங்கள். இதன் மூலம், சோர்வடைவதையும், விரக்தியடைவதையும் நீங்கள் தவிர்த்து விட முடியும்.

தொழில் ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவதற்கு முன், கவனமாக சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கூட்டுத் தொழில் லாபகரமாக இல்லாமல் போகலாம். இப்பொழுது, உங்கள் 7, 8 ஆம் வீடுகளின் அதிபதியான சனி கிரகமும், 6, 9 ஆம் வீடுகளின் அதிபதியான குரு கிரகமும் இணைந்திருக்கிறார்கள். இது, கடன், எதிர்பாராத நிகழ்வுகள், நல்ல தலைவிதி போன்றவற்றில், நல்லது, அல்லாதது என இரண்டும் கலந்த பலன் கொடுக்கக் கூடும். சிலருக்கு, வெளிநாடுகளிலிருந்து கூட்டுத் தொழில் வாய்ப்புகள் வரக்கூடும். ஆனால் இவை குறித்து நீங்கள் கவனமாக இருப்பது அவசியம். இல்லாவிட்டால், நீங்கள் ஏமாற்றப்படக் கூடும். சில சட்டப் பிரச்சனைகளிலும் சிக்கிக் கொள்ளக் கூடும்.வதனால், உங்களுக்கு உடல் சோர்வும் ஏற்படலாம். எனவே உங்கள் வேலை முன்னேற்றத்திற்கு உதவக்கூடிய பயணங்களை மட்டும் மேற்கொள்ளுங்கள்; உயரதிகாரிகளைத் திருப்திப்படுத்துவதற்காகவே பயணம் செல்வதைத் தவிர்த்து விடுங்கள். இதன் மூலம், சோர்வடைவதையும், விரக்தியடைவதையும் நீங்கள் தவிர்த்து விட முடியும்.

கடக ராசி தொழில் வல்லுநர்கள், இயற்கையில் நுண்ணிய உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். இப்பொழுது, அவர்களது கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் உங்கள் விஷயத்தில் இவ்வாறு நடக்கவில்லை என்றால், அதற்காக மனவருத்தம் கொள்ளாதீர்கள். உங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து, அதற்கான நற்பலனை நீங்கள் அனுபவிக்கும் காலம், விரைவிலோ அல்லது சற்று தாமதமாகவோ வரும். மேலும், விடாமுயற்சியுடன் உங்கள் பணிகளைத் தொடருங்கள். தொழில் தொடர்பான இலக்குகளை எட்ட, இது உங்களுக்குத் துணை புரியும். தொழில் தொடர்பான பயணங்களும் உங்களுக்குச் சில நல்ல பலன்களை அளிக்கக் கூடும். உங்களது உத்யோகத்தைக் குறிக்கும் கிரகமான செவ்வாய், விதி, அதிர்ஷ்டம், பயணம் போன்றவற்றைக் குறிக்கும் 9 ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இதனால், நீங்கள் பயணம் செல்வதற்கும், வெற்றி பெறுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

எந்த வித பெரிய நோய் நொடிகளும் இன்றி, இப்பொழுது உங்கள் ஆரோக்கியம் நன்றாகவே காணப்படுகிறது. 7 ஆம் வீட்டில் இருக்கும் குரு கிரகம் காரணமாக, நீங்கள் நல்ல உடல்நிலையுடன் இருக்கக்கூடும். குறிப்பாக, உங்கள் வாழ்க்கைத் துணைவரிடமிருந்து, உணர்வுபூர்வமான முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கக் கூடும். எனினும், மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் சூரியன் தனுசு ராசிக்குள் இருப்பதால், கண் தொடர்பான சில கோளாறுகள் ஏற்படக்கூடும். ஆகவே, உங்கள் ஆரோக்கியம் குறித்து உரிய கவனம் செலுத்துவது நல்லது. மேலும், இந்த மாதம் செவ்வாய், மீன ராசியில் இருப்பதாலும், உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படலாம். ஆனால் உடல்நிலை குறித்து எச்சரிக்கையுடன் இருந்தால், மனஅழுத்தம், சோர்வு போன்றவற்றை நீங்கள் நன்கு சமாளிக்க முடியும்.

கடந்த மாதங்களை விட, இந்த மாதம், மாணவர்களுக்கு ஓரளவு எளிதான காலமாக இருக்கக்கூடும். நீங்கள் ஊக்கத்துடன் படித்து, உங்கள் கல்வி முயற்சிகளில் எழும் அனைத்துத் தடங்கல்களையும் நீக்கி, வெற்றிபெறும் வாய்ப்புள்ளது. குறிப்பாக, மருத்துவம், பொறியியல் மாணவர்களுக்கு இது நல்ல காலம் எனலாம். கலை, படைப்பு போன்ற துறைகளில் இருப்பவர்களும், இப்பொழுது, நன்மைகளை எதிர்பார்க்கலாம். போட்டித் தேர்வுகளையும் நீங்கள் நன்கு எழுதக்கூடும்.

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்