Mon, Jan25, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

நிதிக்காக நிர்வாணப் புகைப்படத்தை ஏலம் விடும் நடிகை!

கொரோனா நிவாரண நிதிக்காக பிரபல நடிகை ஜெனிபர் அனிஸ்டன், 1995ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தன்னுடைய நிர்வாணப் புகைப்படத்தை ஏலம் விடுகிறார்

51 வயது நடிகை ஜெனிபர் அனிஸ்டன், பிரெண்ட்ஸ் (1994–2004) தொடரில் நடித்ததன் மூலம் புகழை அடைந்தவர்.

2000ஆம் ஆண்டுக்குப் பிறகு இவர் நடித்த பல படங்கள் ஹிட் ஆகி இவருக்கு மேலும் புகழைச் சேர்த்தன. உலகின் மிக அழகான பெண்களின் பட்டியலில் பலமுறை இவர் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி செய்ய முன்வந்துள்ளார் அனிஸ்டன்.

1995-ல், அனிஸ்டனுக்கு 26 வயது இருந்தபோது அவரை வைத்து புகைப்படக் கலைஞர் மார்க் செலிகர் ஒரு நிர்வாணப் புகைப்படத்தை எடுத்தார்

அந்தப் புகைப்படத்துடன் தான் எடுத்த 25 புகைப்படங்களை கரோனா நிவாரண நிதிக்காக ஏலத்தில் விட முடிவெடுத்துள்ளார் செலிகர்.

இன்ஸ்டகிராம் தளத்தில் இதுகுறித்த தகவலை விடியோவுடன் வெளியிட்டுள்ளார் அனிஸ்டன்.

ஏலத்தில் கிடைக்கும் தொகை, என்.ஏ.எஃப். கிளினிக்ஸ் அறக்கட்டளைக்கு வழங்கப்படும்.

கரோனா நோயாளிகளின் மருத்துவ சிகிச்சைக்கும் இலவசப் பரிசோதனைக்கும் அந்த அறக்கட்டளை இந்த நிதியைச் செலவிடும் என்று அனிஸ்டன் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்