Sun, Jan17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

பணிப்பெண் துன்புறுத்தல் – தம்பதிக்குச் சிறை

பணிப்பெண்ணைக் கொடுமைப்படுத்திய சிங்கப்பூர்த் தம்பதிக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டில், மியன்மாரைச் சேர்ந்த 31 வயது மோ மோ தான் (Moe Moe Than) பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளானார்.

போர்வையும் தலையணையும் இன்றி ஒவ்வொரு நாளும் 6 மணி நேரத்திற்கும் குறைவான தூக்கம், வெறும் சோறு அல்லது அதில் சீனி மட்டும் கலந்து சாப்பிடச் செய்வது என வெவ்வேறு வகைகளில் அவர் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்.

அது போதாதென்று, வீட்டு முதலாளியான 41 வயது டே வீ கியெட்டும் (Tay Wee Kiat) அவரது மனைவி 43 வயது சியா யுன் லிங்கும் (Chia Yun Ling), குமாரி தானை அடித்தும் துன்புறுத்தினர்.

விளக்குமாறால் அடிப்பது, உதைப்பது, மற்றொரு பணிப்பெண்ணால் மாறி மாறிக் கன்னத்தில் அறைந்துகொள்ளச் செய்வது என அந்த இருவரும் தானைத் துன்புறுத்தினர்.

மேலும், நாளொன்றுக்கு மூன்றுமுறை மட்டுமே குமாரி தான் வீட்டிலுள்ள கழிப்பறையைப் பயன்படுத்தலாமெனக் கட்டுப்படுத்தப்பட்டார். அவரது நடமாட்டம், கண்காணிப்புக் கேமராவின்மூலம் கண்காணிக்கப்பட்டது.

மூன்றுமுறைக்கு மேல் கழிப்பறையைப் பயன்படுத்தியது தெரியவந்தால், அதற்காகவும் குமாரி தான் தண்டிக்கப்பட்டார். அது அடிப்படை மனித உரிமையை மீறும் செயல் என்று நீதிபதி சாடினார்.

அதனால், டே வீ கியெட்டுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவரது மனைவி சியா யுன் லிங்கிற்கு 3 ஆண்டுகள், 11 மாதச் சிறைத் தண்டனையோடு 4,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.

Latest news

Related news