தொடரும் அசம்பாவிதம்...  யாழில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி

இளம் யுவதி ஒருவர் யாழ்ப்பாணத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடரும் அசம்பாவிதம்...  யாழில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி

இளம் யுவதி ஒருவர் யாழ்ப்பாணத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் சுழிபுரம் – கல்விளான் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து நேற்றிரவு யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அதேப் பகுதியை சேர்ந்த 24 வயதான யுவதியே உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதி அவரது வீட்டில் இருந்து 300 மீற்றர்கள் தொலைவில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யுவதியை மீட்ட அயலவர்கள், சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளர்.

மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW