தோனிக்கு வந்த கூடுதல் பொறுப்பு.. சிஎஸ்கே எதிர்காலத்தை மாற்றப்போகும் வீரர்!

ஆனால் தீபக் சஹார் காயம் காரணமாக பாதி தொடரில் விளையாடாமல் போகலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

தோனிக்கு வந்த கூடுதல் பொறுப்பு.. சிஎஸ்கே எதிர்காலத்தை மாற்றப்போகும் வீரர்!

ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் வரும் சனிக்கிழமை முதல் தொடங்கவுள்ள சூழலில் சிஎஸ்கேவில் இன்னும் ப்ளேயிங் 11 குழப்பத்திற்கு முடிவு எட்டப்படவில்லை.

இதற்கு காரணம் தீபக் சஹார், ருதுராஜ் கெயிக்வாட், மொயீன் அலி ஆகிய 3 வீரர்களின் ஃபிட்னஸ் தான்.

ஓப்பனிங் வீரர் பிசிசிஐ-ன் யோயோ டெஸ்டில் தகுதிப்பெற்றுவிட்டு, தற்போது சிஎஸ்கேவின் உடற்தகுதி தேர்வுக்கு வந்துவிட்டார். மற்றொரு புறம் மொயீன் அலி விசா கிடைக்காமல் இன்னும் இந்தியாவுக்கு கிளம்பாமல் இருக்கிறார். 

ஆனால் தீபக் சஹார் காயம் காரணமாக பாதி தொடரில் விளையாடாமல் போகலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

பவர் ப்ளேவிலேயே விக்கெட் மழை பொழிந்து அசத்தக்கூடியவர் தீபக் சஹார். கடந்த 2019ம் ஆண்டு முதல் தீபக் சஹார் பவர் ப்ளே ஓவர்களில் மட்டும் 32 விக்கெட்களை எடுத்துள்ளார். 

உலகின் முன்னணி பவுலரான ட்ரெண்ட் போல்ட் 21 விக்கெட்டுடன் 2வது இடத்தில் இருக்கிறார். எனவே சஹாருக்கு மாற்றாக எந்த பவுலரை கொண்டு வந்தாலும், அது அவரை போன்று இருக்காது என சிஎஸ்கே புலம்பி வருகிறது.

இந்நிலையில் அதற்கு ஒரு விடை கொடுத்துள்ளார் இர்ஃபான் பதான். அதில், ஷர்துல் தாக்கூரும் அணியில் இல்லை. இதனால் பவுலிங் வெற்றிடத்தை நிரப்பக்கூடிய ஒரே வீரர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் தான். U 19 உலகக்கோப்பையில் பேட்டிங் & பவுலிங் என அசத்திய ராஜ்வர்தன் தான் சிஎஸ்கேவை காப்பாற்ற போகிறார் என்பதை நான் அடித்துக்கூறுவேன்.

இவரை போன்ற இளம் வீரர்கள் மற்ற அணிகளுக்கு சென்றால், நான் உறுதி அளிக்க மாட்டேன். ஆனால் தோனி போன்ற ஒரு கேப்டன் இருந்தால், நிச்சயம் அவரின் முழு திறமை வெளிவரும். 

ஸ்டம்பிற்கு பின்னால் நின்று, இளம் வீரர்களை அவ்வளவு சுலபமாக கையாள்வார் தோனி. எனவே சஹார் வரும்வரை தோனி ஹங்கர்கேகரை வைத்து சிறப்பாக ஆடலாம் என நினைப்பதாக இர்ஃபான் பதான் கூறியுள்ளார்.