சிஎஸ்கே ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.! எனினும் ஒரு சிக்கல்!
கடைசி கட்டம் ஆன போதும், நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தான் அடி மேல் அடி விழுந்துள்ளது.

ஐபிஎல் 15வது சீசன் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இன்னும் 5 நாட்களே உள்ளதால் வீரர்கள் திவீர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கடைசி கட்டம் ஆன போதும், நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தான் அடி மேல் அடி விழுந்துள்ளது.
சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்களாக பார்க்கப்படும் ருதுராஜ் கெயிக்வாட், தீபக் சஹார், மொயீன் அலி ஆகிய 3 பேரும் முதல் பாதி போட்டிகளில் விளையாடுவார்களா என்பதில் குழப்பம் ஏற்பட்டது. குறிப்பாக ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் தீபக் சஹார் காயத்தால் பாதிக்கப்பட்டதால், பின்னடைவாக இருந்தது.
இந்நிலையில் தான் அவர்களின் உடற்தகுதி குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. நேற்று நடத்தப்பட்ட உடற்தகுதி தேர்வில் ஓப்பனிங் வீரரான ருதுராஜ் கெயிக்வாட் தேர்ச்சிப்பெற்றுள்ளார்.
மேலும் முதல் போட்டியில் இருந்தே அவர் விளையாடலாம் என பிசியோதெரபிஸ்ட் தெரிவித்துள்ளனர். இதனை அணி செயல்தலைவர் காசி விஸ்வநாதனும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த சீசனில் ருதுராஜ் கெயிக்வாட்டுடன் சேர்ந்து நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வே ஓப்பனிங் களமிறங்கவுள்ளார்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டை வைத்துள்ள கான்வே மற்றும் ருதுராஜ் பவர் ப்ளேவில் குறைந்தது 50 ரன்களை குவிக்க, திட்டமிடப்பட்டுள்ளது.
இவர்களை தவிர்த்து தீபக் சஹாரின் ஃபிட்னஸ் இன்னும் மோசமாக உள்ளது. பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள சஹாருக்கு காலில் தசை நார் கிழிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர் முதல் பாதியில் விளையாட வாய்புகள் மிகக்குறைவு என்றே பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் ருதுராஜின் கம்பேக் ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW |