90-ஸ் கிட்ஸ் வாழ்க்கை பிரதிபலிக்கும் "இனி ஒரு காதல் செய்வோம்"

"இனி ஒரு காதல் செய்வோம்" திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஹரிஹரன் எழுதி, இயக்கியுள்ளார்.

90-ஸ் கிட்ஸ் வாழ்க்கை பிரதிபலிக்கும் "இனி ஒரு காதல் செய்வோம்"

எப்பிக் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள முதல் படமான "இனி ஒரு காதல் செய்வோம்" திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஹரிஹரன் எழுதி, இயக்கியுள்ளார். 

இப்படத்தின் மூலம் அஜய் பாலகிருஷ்ணா கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார். இதன் கதாநாயகியாக ஸ்வேதா ஷ்ரிம்டன் நடித்துள்ளார். மேலும் வர்கீஸ் மேத்யூ, கிஷோர் ராஜ்குமார், விக்னேஷ் சண்முகம், திடியன், மனு பார்த்திபன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு கோபிநாத் சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, "ரேவா" எனும் பெண் இசையமைப்பாளர் இசையமைத்துள்ளார். "கார்த்திக் நேத்தா" இந்த படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார். 

படத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து பாடல்களையும் பாடகர்கள் சின்மயி, ஸ்வேதா மோகன், ஹரி சரன், தீபக் போன்றோர் பாடியுள்ளனர். மேலும் "நிழல்கள் ரவி" அவர்கள் குரலில், சமீபத்தில் வெளியான இத்திரைப்படத்தின் பாடல், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தொண்ணூறுகளில் பிறந்தவர்களின் கல்லூரி வாழ்க்கையையும், நட்பையும், காதல் மற்றும் பிரிவையும் பிரதிபலுக்கும் வண்ணம் படத்தின் கதை அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

விறுவிறுப்பாக உருவாகி வரும் இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்களை வரும் ஆகஸ்டு மாதம் வெளியிடவும், திரைப்படத்தை வரும் கிறிஸ்த்துமஸ் விடுமுறையில் வெளியிடவும் படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். விரைவில் இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.