எதிர்பார்ப்புடன் இந்தியா – ஆஸ்திரேலியா தொடர்

இந்தியா – ஆஸ்திரேலியா தொடர் என்றாலே எப்போதும் பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமிருக்காது. இந்த பரபரப்பு கபில் தேவ் காலம்தொட்டு விராட் கோலி காலம் வரை நீடிக்கிறதென்றால் அது மிகையல்ல.

இரு அணிகளுக்கு இடையிலான போட்டிகள் அது ஆஸ்திரேலியாவில் நடந்தாலும் சரி இந்தியாவில் நடந்தாலும் சரி எப்போதும் ரசிகர்களுக்கு விருந்தாகவே அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

மீண்டும் ஒரு இந்தியா – ஆஸ்திரேலியா தொடர் நடைபெற இருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணி தன்னுடைய முழு பலத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் இந்தியாவுக்கு எப்போதும் பெரிய வெற்றிகளை கொடுத்ததில்லை. 1970 முதல் 2003 வரை ஆஸ்திரேலியாவின் கையே ஓங்கியிருந்தது.

முதல்முறையாக ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் தொடர் வெற்றியை 2003 இல் தடுத்து நிறுத்தியது அனில் கும்பளே தலைமையிலான இந்திய அணி. அதன்பின்பு 2018 இல் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனையை படைத்தது.

அந்தத் தொடரில் முக்கிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாதது இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக கூறப்பட்டாலும், அந்தத் தொடரில் இந்தியா அசத்தியது என்பதை மறுக்க முடியாது.

ஏறக்குறைய 71 ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது விராட் கோலியின் படை. இந்நிலையில் மீண்டும் இம்முறையும் தொடரை வெல்லும் முனைப்போடு களமிறங்குகிறது கோலியின் அணி.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
4
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

மாநாடு படத்தின் புதிய போஸ்டர் வெளியானது

Next Article
Tallest Teenager

‘உலகின் மிக உயரமான இளைஞன்‘ கின்னஸ் சாதனை

Related Posts
Read More

முதல் வெற்றியை பெற்றது கொழும்பு கிங்ஸ்

லங்கா ப்ரீமியர் லீக் (LPL)T20 கிரிக்கெட் தொடரில் ஆரம்ப போட்டியில் கண்டி டஸ்கர்ஸ் அணியை எதிர்கொண்ட கொழும்பு கிங்ஸ் அணி வெற்றியை பதிவுசெய்துள்ளது. இரண்டு…
Read More

கால்பந்தாட்ட நட்சத்திரம் மரடோனா காலமானார் !

அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரரும், கால்பந்தாட்ட ஜாம்பவானுமான டீகோ மாரடோனா மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுபது வயதான மாரடோனா அவரது வீட்டில்…
The Undertaker,WWE,Sendoff,retires,அண்டர்டேக்கப்,மல்யுத்தம்,விடைப்பெற்றார்,ஓய்வு
Read More

30 ஆண்டு கால சாகசம் ! விடைப்பெற்றார் “அண்டர்டேக்கர்”

WWE மல்யுத்தத்தில் 90s கிட்ஸ்களின் ஆதர்ஷ நாயகனாக வலம் வந்த அண்டர்டேக்கர் சண்டைக்களத்திலிருந்து விடைபெற்றார். WWE நிர்வாகம் அவரை சிறப்பான முறையில் வழியனுப்பி வைத்தது.…
Read More

மெதுவாக பந்து வீசுங்கள்… ஹரிஸ் ராவஃப் இடம் கேட்ட ஷாஹித் அப்ரிடி!

பாகிஸ்தான் சூப்பர் லீக் 2020 தொடரின் 2 ஆவது தகுதிச்சுற்று போட்டி முல்தான் சுல்தான்ஸ் மற்றும் லாகூர் குவாலண்டர்ஸ் அணிகளுக்கு இடையே நவம்பர் 15…
Total
4
Share