Thu, Jan28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

பரபரப்பின் உச்சத்தில் சிட்னி டெஸ்ட் போட்டி

இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் கடந்த டிசம்பர் 7-ந் தேதி தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 338 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 131 ரன்களும், புகோவஸ்கி 62 ரன்களும், லபுசேஸன் 91 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில், ஜடேஜா 4 விக்கெட்டுகளும், சைனி, பும்ரா தலா 2 விக்கெட்டுகளும், சிராஜ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 244 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக சுப்மான் கில், புஜாரா ஆகியோர் 50 ரன்கள் எடுத்தனர்.

கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய 37 பந்துகளில் 28 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில், கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளும், ஹாசில்வுட் 2 விக்கெட்டுகளும், ஸ்டார்க் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 94 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் வார்னர் (13) புகோவஸ்கி (10) என விரைவில் ஆட்டமிழந்தாலும் அடுத்து வந்த வீரர்களான லபுசேஸன் 73 ரன்களும், முதல் இன்னிங்சில் சதம் கடந்த ஸ்டீவ் ஸ்மித் 81 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய கேப்டன் பெய்ன் அதிரடியாக விளையாட மறுமுனையில் முதல் அரைசதத்தை பதிவு செய்த கேமரூன் கிரீன் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 8 பவுண்டரியும் 4 சிக்சர்களும் அடங்கும்.

87 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. கேப்டன் பெய்ன் 52 பந்துகளில் 39 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். இந்திய அணி தரப்பில், அஸ்வின், சைனி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், சிராஜ் பும்ரா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். முதல் இன்னிங்சில் 94 ரன்கள் பின்தங்கியதால் இந்திய அணிக்கு 407 ரன்கள் இலக்காக நிர்ணையிக்கப்பட்டது.

இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில், சும்மான் கில் ரோகித் சர்மா இருவரும் முதல் இன்னிங்சை போல நல்ல தொடக்கம் கொடுத்தனர். இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்த நிலையில், 31 ரன்கள் எடுத்திருந்த இளம்வீரர் சுப்மான் கில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து அரைசதம் கடந்த ரோகித் சர்மா 52 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்திருந்தது. ரஹானே 4 ரன்களுடனும், புஜாரா 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

தொடர்ந்து இன்று நடைபெறும் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் தொடர்ந்து பேட்டிங் செய்த கேப்டன் ரஹானே முந்தைய நாள் ஸ்கோருடன் நடையை கட்டினார். அடுத்து களமிறங்கிய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் புஜாராவுடன் ஜோடி சேர்ந்து ரன்குவிப்பில் ஈடுபட்டார்.

இந்தியாவின் 2-ம் தடுப்புச்சுவர் என்ற பெயருகேற்ப விளையாடிய புஜாரா நிதானமாக ஆட மறுமுனையில், பண்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியாவின் ரன்விகிதம் கனிசமாக உயர்ந்தது.

தொடர்ந்து சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்த பண்ட் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 97 ரன்கள் எடுத்து லியோன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். புஜாரா பண்ட் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 148 ரன்கள் சேர்த்தது.

தொடர்ந்து களமிறங்கிய விஹாரி தடுப்பாட்டத்தில் ஈடுபட, அரைசதம் கடந்து விளையாடிய புஜாரா 77 ரன்களில் ஹாசில்வுட் பந்துவீச்சில் போல்ட் ஆனார். தேனீர் இடைவேளை வரை இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் எடுத்துள்ளது.

இன்னும் வெற்றிக்கு 127 ரன்கள் தேவை என்ற நிலையில், இந்தியாவின் கைவசம் 5 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளது. இதனால் தற்போது இந்த போட்டி யாருக்கு சாதகமாக அமையும் என்பது கணிக்க முடியாத நிலையில் உள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்