பாகிஸ்தானிடம் தோற்றது இந்தியா

ஆசியக் கோப்பையின் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடின. முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

பாகிஸ்தானிடம் தோற்றது இந்தியா

ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 சுற்றின் போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை வென்றது.

ஆசியக் கோப்பையின் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் விளையாடின. முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். 

இந்த ஜோடி சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தது. முதல் 5 ஓவர்களில் இந்திய அணி 50 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் தலா 28 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர். 

இதனையடுத்து, விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தனர். விராட் கோலி சீரான இடைவெளிகளில் பவுண்டரிகளை விரட்டினார். அதனால், இந்திய அணியின் ரன் ரேட் ஓவருக்கு 9க்கு கீழ் குறையாமல் சென்றது. இருப்பினும், சூர்யகுமார் யாதவ் 13 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதன்பின் விராட்  கோலி ஒரு முனையில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் தீபக் ஹூடா அவருக்கு உறுதுணையாக விளையாடினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி அவர் எதிர்கொண்ட 36வது பந்தில் சிக்ஸர் விளாசி அரைசதம் அடித்து அசத்தினார். 

தீபக் ஹூடா 16 ரன்களில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய விராட் கோலி 44 பந்துகளில் 60 ரன்கள் குவித்து ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்தது. 

அதனைத் தொடர்ந்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி களமிறங்கியது. 

துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பாபர் ஆசம், முகமது ரிஸ்வான் நிதானமான தொடக்கத்தைத் தந்தாலும் பாபர் ஆசம் 14 ரன்களில் ரவி பிஷ்னாய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மூன்றாவது பேட்ஸ்மேனாகக் களமிறங்கிய ஃபக்தர் சமாமும் 15 ஆட்டமிழந்ததார். 

அதற்கடுத்து முகமது ரிஸ்வான் மற்றும் நவாஸ் இணை ஜோடி சேர்ந்து இந்திய பந்துவீச்சாளர்களைத் திணறடித்தனர். 15.2 ஓவரில் நவாஸ் 42 ரன்களில் புவனேஸ்வர்குமார்  பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.  அதிரடியாக விளையாடிய ரிஸ்வான் 71 ரன்களில் இருந்தபோது அவுட் ஆனார். 

பின்னர், ஆசிப் அலி 16 ரன்களில் 19-வது ஓவரில் ஆட்டமிழந்தததும் ஆட்டம் பரபரப்பானது. இறுதியில் குஷ்தில் ஷா, ஃப்க்தார் அகம்து இணை 19.5 ஓவர் முடிவில் 182 ரன்களை எடுத்தது. இதனால், 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய  அணியை பாகிஸ்தான் அணி வென்றது.