அமெரிக்காவில் கட்டுப்பாடு தளர்வால் பாதிப்பு அதிகரிப்பு

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், பல மாகாணங்களில், கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருவதாக, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

உலகெங்கும், கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளோர் எண்ணிக்கை, 37.40 இலட்சத்தை தாண்டியுள்ளது. 2.58 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் மட்டும், 12.37 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுனட், உயிரிழப்பு எண்ணிக்கை 72 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

உலக பாதிப்பு மற்றும் உயிரிழப்பில், மூன்றில் ஒரு பங்கு, அமெரிக்காவில் பதிவாகியுள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக இருந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டார்.

இதனால், பல மாகாணங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள அதே நேரத்தில், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க் மாகாணம் உள்ளிட்டவற்றில் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.

இந்நிலையில், புள்ளி விபரங்களின் அடிப்படையில், மருத்துவ நிபுணர்கள் நடத்திய ஆய்வில், அமெரிக்காவில் தற்போது, நாளொன்றுக்கு, 20 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்படுகின்றமை தெரியவந்துள்ளது.

அதேபோல், தினசரி, குறைந்த பட்சம், 1,000 உயிரிழப்பு பதிவாகின்ற நிலையில், அதிக அளவில் சோதனை செய்யப்படுவதால், அதிக பாதிப்பு இருப்பதாக கூறுவது முற்றிலும் தவறு. உண்மையில் அதிக அளவு பாதிப்பு உள்ளது. அது தற்போது தான் தெரிய வருகிறது.

தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு மற்றும் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கும் அபாயம் நிச்சயம் உள்ளது.
இதற்கு மேலும் தவறு செய்ய வேண்டாம். கட்டுப்பாடுகள் இருந்த காலத்தைவிட, தற்போது மிக மோசமான நிலை உள்ளது என, ஆய்வில் தெரியவந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
4
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
கொரோனா தொற்று

இலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Next Article
Powerful 7.3-magnitude earthquake hits Indonesia

இந்தோனேசியாவில் 7.3 ரிக்டரில் கடும் நிலநடுக்கம்

Related Posts
Read More

மஹர சிறைச்சாலையில் பதற்றம்: 6 கைதிகள் பலி; 58 பேர் காயம்

மஹர சிறைச்சாலையில் நேற்று (29) மாலை ஏற்பட்ட பதட்ட நிலை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைக்குள் பரவியிருந்த தீ…
Read More

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஏழு பேர் பற்றிய விவரம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின்…
Read More

டீக்ரே பிராந்தியத் தலைநகரை ராணுவம் பிடித்துவிட்டது; எத்தியோப்பியப் பிரதமர் அபிய் அகமது அறிவிப்பு

எத்தியோப்பியாவில் வட டீக்ரே பிராந்தியத்தின் மீது அந்நாட்டின் மத்திய அரசு நடத்திவரும் போரில் டீக்ரே பிராந்தியத் தலைநகரம் மிகாய்லி அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக…
கொரோனா
Read More

நேற்றும் இரண்டு கொரோனா மரணங்கள்- மரண எண்ணிக்கை 109ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களில் மேலும் இரண்டு பேர் நேற்று (28) உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா…
Total
4
Share