Thu, May13, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Latest Posts

நான் எதையும் இழக்கவில்லை: மறைந்த நடிகரின் மனைவி உருக்கம்

மறைந்த பொலிவுட் நடிகர் இர்ஃபான் கானின் மனைவி, தனது கணவரின் மரணம் குறித்து சமூக வலைதளத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

ஏற்கெனவே கொரோனா தொற்று அச்சத்தாலும், அதன் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவாலும் இந்தியா முழுவதும் முடங்கிப் போயிருக்கிறது.

இந்தியத் திரையுலகமே செய்வதறியாது தவித்துப் போயிருக்கும் இந்த நிலையில் ஹிந்தி திரையுலகை மேலும் வருத்தத்தில் ஆழ்த்தும் விதமாக சில இழப்புகளையும் அவர்கள் தொடர்ந்து சந்திக்க நேர்ந்தது.

நடிகர் இர்பான் கான் முற்றும் நடிகர் ரிஷி கபூர் ஆகியோரின் மரணம் இந்திய திரையுலகம் முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் தனது கணவனின் பிரிவு குறித்து நடிகர் இர்ஃபான் கானின் மனைவி சுதபா சிக்தர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

‘நான் எதையும் இழக்கவில்லை. அனைத்து வகையிலும் எல்லாவற்றையும் பெற்றிருக்கிறேன்’ என்று தனது கணவனைக் கட்டி அணைத்திருக்கும் படியான புகைப்படத்தைப் பதிவிட்டு, அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

காதல் திருமணம் செய்து கொண்ட இர்ஃபான்-சுதபா தம்பதியருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest Posts

சினிமா

x