ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி வீரர்கள் ஆதிக்கம்
ஐசிசி தனது தரவரிசைப் பட்டியலை புதுப்பித்துள்ளது. இதில், இந்திய அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.

ஐசிசி தனது தரவரிசைப் பட்டியலை புதுப்பித்துள்ளது. இதில், இந்திய அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.
இதில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப்பட்டியளில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் ஆஸ்வின் 864 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
மேலும், இந்திய அணி வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் ஷாகீன் ஷா அஃப்ரிடி முறையே 4ஆவது மற்றும் 5ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளனர். காயம் காரணமாக கடந்த ஜூலை மாதத்திற்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் பும்ரா விளையாடவில்லையென்றாலும் 4ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இங்கிலாந்து வீரர் ஒல்லி ராபின்சன் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சோபிக்காததையடுத்து, அவர் 6ஆவது இடத்துக்கு பட்டியலில் இறங்கியுள்ளதால், பும்ரா மற்றும் ஷாகீன் ஷா அஃப்ரிடி ஐசிசி சர்வதேச டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஒரு இடம் முன்னேறியுள்ளனர். இந்திய ஆல் ரவுண்டர் ஜடேஜா 8ஆவது இடத்துக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.
ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி வீரர்கள் ஆதிக்கம்
நம்பர் 1 ஒருநாள் அணி: இந்தியா (114 புள்ளிகள்)
நம்பர் 1 டி20 அணி: இந்தியா (267 புள்ளிகள்)
நம்பர் 1 டி20 பேட்டர்: சூர்யகுமார் யாதவ்
நம்பர் 1 டெஸ்ட் பந்துவீச்சாளர் : ரவிச்சந்திரன் அஸ்வின்
நம்பர் 1 ஒருநாள் பந்துவீச்சாளர்: சிராஜ்
நம்பர் 1 ஆல்ரவுண்டர்: ரவீந்திர ஜடேஜா