எண்ணெய் வேண்டாம்… சப்பாத்தி இப்படி செய்து பாருங்க!

இப்படியாக பல ஆரோக்கிய நன்மைகளையும், ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கியுள்ள சப்பாத்தியை எண்ணெய் உபயோகிக்காமல் சாஃப்டாக செய்திட நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சிம்பிள் ட்ரிக்ஸை இங்கு பார்க்கலாம்.

எண்ணெய் வேண்டாம்… சப்பாத்தி இப்படி செய்து பாருங்க!

ஆரோக்கியமான உணவு என்று வரும்போது சப்பாத்திக்கு முக்கிய இடம் உண்டு. கோதுமை மாவில் செய்யப்படும் இந்த சப்பாத்தி சுவையானது மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை தரக்கூடியது குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு சப்பாத்தி ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். 

கோதுமை மாவில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்களும், தாதுக்களும் நிரம்பியுள்ளன

இப்படியாக பல ஆரோக்கிய நன்மைகளையும், ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கியுள்ள சப்பாத்தியை எண்ணெய் உபயோகிக்காமல் சாஃப்டாக செய்திட நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சிம்பிள் ட்ரிக்ஸை இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

கோதுமை மாவு அல்லது மல்டி கிரேயின் ஆட்டா 300gms

தண்ணீர் தேவையான அளவு

உப்பு தேவையான அளவு

எண்ணெய் – 1 ஸ்பூன்

செய்முறை

முதலில் மாவை பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, தேவையான அளவு உப்பை சேர்க்க வேண்டும். அடுத்து, குறைந்த அளவில் எண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம்.

பின்னர், மாவை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்கு பிசைய வேண்டும். நல்லா உருண்டையாக மாவை பிசைந்துவிட்டு, அதில் கொஞ்சமாக எண்ணெய் சேர்த்து ஊற வைக்க வேண்டும். குறிப்பு: ஊற வைக்கும் போது, மாவு கொஞ்சம் சாஃப்டாக மாறக்கூடும்.

அடுத்ததாக, மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, கோதுமை மாவை அதன் மீது சேர்ந்துகொண்டு, சப்பாத்தி வடிவடத்திற்கு உருட்ட வேண்டும்.

பின்னர். டவா அல்லது தோசை கல் நன்கு சூடானதும், உருட்டின சப்பாத்தியை போட வேண்டும். பபுள்ஸ் வரவது வரை வெயிட் செய்துவிட்டு, பின்னர் அதனை திருப்பி போட வேண்டும். துணி வைத்து சப்பாத்தி நன்கு அமுக்கிவிட்டால், சப்பாத்தி நல்லா உப்பி மேல வரும்.

அவ்வளவு தான், இப்போது நீங்கள் எதிர்பாத்த சாஃப்ட் சப்பாத்தி தயார். இதை உங்களுக்கு பிடித்த சைடிஸ்களுடன் சேர்த்து ருசித்து மகிழவும்.