ஒரே இரவில் முகப்பருக்கள் நீங்க வேண்டுமா?

முகப்பரு என்பது இளம் வயதினரிடையே பொதுவானது.

ஒரே இரவில் முகப்பருக்கள் நீங்க வேண்டுமா?

முகப்பரு பிரச்சனையை பெரும்பாலான மக்கள் சந்திக்கின்றனர். முகப்பரு என்பது இளம் வயதினரிடையே பொதுவானது.

இருப்பினும் இது எல்லா வயதினரையும் பாதிக்கிறது. முகப்பரு வந்தால் முகத்தில் அழகையே கெடுத்து விடுகின்றது.

இதனை ஆரம்பத்திலே போக்குவது நல்லது. அந்தவகையில் முகப்பருவை ஓரே இரவில் போக்க கூடிய சில எளிய டிப்ஸ்களை பார்ப்போம்.    

  • வெள்ளரிக்காயை அரைத்து அதை முகத்தில் தடவுங்கள். அல்லது தினமும் வெள்ளரிக்காய் ஊற வைத்த நீரால் முகத்தைக் கழுவுங்கள்.
  • முகப்பரு உள்ள இடத்தில் டூத்பேஸ்ட்டை நேரடியாக அப்ளை செய்யுங்கள். பேஸ்ட் அப்ளை செய்யும் முன் ஐஸ் கட்டிகளை பருக்களில் வைத்து தேய்த்த பிறகு அப்ளை செய்யுங்கள். இதனால் முகப்பருவில் உள்ள கிருமிகள் மற்றும் நீரை உறிஞ்சி கூடுதலான எண்ணெய்யையும் உள்ளிழுத்துக் கொள்ளும். பருக்களும் நீங்கும்.  
  • பஞ்சை தேனில் நனைத்து பருக்கள் உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் பருக்கள் முற்றிலும் மறைந்துவிடும்.
  • எலுமிச்சை சாறைப் பிழிந்து, பஞ்சில் நனைத்து பருக்களின் மேல் ஒத்தி எடுங்கள். பருக்கள் உடைந்து இருந்த இடம் தெரியாமல் போகும்.
  • இரவு தூங்கும்முன், பருக்கள் உள்ள இடத்தில் இதைத் தடவி காலை எழுந்து பார்த்தால் உங்களாலேயே நம்ப முடியாது. அந்த அளவிற்கு நல்ல பலன் கிடைக்கும்.
  • கிரீன் டீ பேகை தண்ணீரில் நனைத்து அல்லது ஃபிரிஜ் ஃப்ரீசரில் பேகை வைத்து பருக்கள் உள்ள இடங்களில் ஒத்தடம் கொடுத்தால் பருக்கள் முற்றிலும் நீங்கும்.
  • புதினாவை அரைத்து அதில் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவ நல்ல பலன் கிடைக்கும்.
  •  எண்ணெயில் பஞ்சை நனைத்து பருக்கள் உள்ள இடத்தில் ஒத்தி எடுத்து 15 - 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவிவிடுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
  • பேக்கிங் சோடாவை பருக்கள் உள்ள இடங்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ பருக்கள் நீங்கும்.