சுற்றுலா சென்ற நபர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த ஐ.கான்ஸ்க் சேனாரத்தின என்ற 19 வயதுடைய ஒருவரே அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுற்றுலா பயணம் மேற்கொண்ட ஒருவர் சிறிய ரக பட்டா லொறியொன்று மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.
இதனையடுத்து, அவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த ஐ.கான்ஸ்க் சேனாரத்தின என்ற 19 வயதுடைய ஒருவரே அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
பொலன்னறுவையிலிருந்து திருகோணமலைக்குச் சுற்றுலா சென்ற பேருந்து வண்டி கந்தளாய் குளத்தினை அண்டிய பகுதியில் நிறுத்தப்பட்டு அங்குள்ள பகுதிகளைப் பார்வையிட்டுள்ளனர்.
இதன்போது அவர்களில் ஒருவர் பிரதான வீதியைக் கடக்க முற்பட்ட போதே வீதியில் வேகமாகச் சென்ற சிறிய ரக பட்டா வாகனம் மோதியமையால் குறித்த நபர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் பட்டா வாகனத்தின் சாரதியைக் கைது செய்யப்பட்டுள்ளார்'' என தெரிவித்துள்ளனர்.