தோழியின் கணவரை கைபிடிக்க ஹன்சிகா எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

சிம்புவுடனான காதலுக்கு பின்னர் படங்களில் கவனம் செலுத்தவில்லை. பின் சிம்பு-ஹன்சிகா காதல் பிரேக் அப் ஆனது. அதை அடுத்து நடிகை ஹன்சிகா பிரபு தேவாவுடன் காதலில் இருந்ததாகவும் சில செய்திகள் வெளியாகி இருந்தது.

தோழியின் கணவரை கைபிடிக்க ஹன்சிகா எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

ஹன்சிகா  திருமணம்

நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழில் மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். பின்னர் இவர் வேலாயுதம், எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம்-2, சேட்டை, மான் கராத்தே, அரண்மனை 1,2 , ரோமியோ ஜூலியட், போகன்,குலேபகாபலி என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார்.

சிம்புவுடனான காதலுக்கு பின்னர் படங்களில் கவனம் செலுத்தவில்லை. பின் சிம்பு-ஹன்சிகா காதல் பிரேக் அப் ஆனது. அதை அடுத்து நடிகை ஹன்சிகா  பிரபு தேவாவுடன் காதலில் இருந்ததாகவும் சில செய்திகள் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான Sohail Kathuria என்பவரை தான் ஹன்சிகா திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். 

சமீபத்தில் ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோஹைல் கதுரியா ஈபிள் டவர் அருகில் நின்று கொண்டு தன் காதலைத் தெரிவிப்பது போன்ற படத்தைப் பகிர்ந்து இருந்தார். 

தோழியின் முன்னாள் கணவருடன் ஹன்சிகா  திருமணம்

இந்த நிலையில் ஹன்சிகாவின் வருங்கால கணவர் குறித்த ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது ஹன்சிகா திருமணம் செய்துகொள்ள இருக்கும் சோஹைல் கதுரியாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டதாம். 

மேலும், இவருக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பே திருமணம் நடைபெற்று இருக்கிறது. அவர் திருமணம் செய்த பெண்ணின் பெயர் ரிங்கி, இவர் ஹன்சிகாவின் நெருங்கிய தோழியும் கூட. இந்த திருமணத்தில் ஹன்சிகாவும் கலந்துகொண்டார். 

இந்த நிலையில், ஹன்சிகா – சோஹேல் திருமணம் டிசம்பர் 4 ஆம் தேதி ஜெய்ப்பூர் அரண்மனையில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் நடைப்பெற உள்ளது. 

அத்துடன், ஹன்சிகாவின் திருமண ஒளிபரப்பு உரிமையை டிஸ்னி + ஹாட் ஸ்டார் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. 

ஏற்கனவே விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண ஒளிபரப்பு உரிமையை Netflix Ott தளத்திற்கு பல கோடிகளுக்கு விற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.