இலங்கையில் இரண்டு இலட்சத்தை அண்மிக்கும் தங்கத்தின் விலை

இலங்கையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 654,007 ரூபாயாக இன்று பதிவாகியுள்ளது.

இலங்கையில் இரண்டு இலட்சத்தை அண்மிக்கும் தங்கத்தின் விலை

இலங்கையில் ஒரு அவுன்ஸ்  தங்கத்தின் விலை 654,007 ரூபாயாக இன்று பதிவாகியுள்ளது. 

இதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 184,600 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 169,200 ரூயாக பதிவாகியுள்ளது. 

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதுடன், நேற்றைய நிலவரப்படி, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 2 சதவீத உயர்வில் காணப்படுகின்றது.  

இதேவேளை, சர்வதேச சந்தையில் தங்கத்தின் மேலும் உயரக்கூடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளதோடு, உள்ளூர் சந்தைகளில் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது.