Wed, May12, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Latest Posts

ஸ்ரீவில்லிப்புத்தூர், கோவை முழு முடக்கம்!

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஸ்ரீவில்லிப்புத்தூர், கோவை ஆகிய பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு கடந்த இரு தினங்களாக 6 ஆயிரத்தைக் கடந்து பதிவாகி வருகிறது. சென்னையில் முன்பைவிட பாதிப்பு குறைந்து வருகிறது என்றாலும், மதுரை, கோவை, விருதுநகர், ஆகிய பகுதிகளில் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கோவை, ஸ்ரீவில்லிப்புத்தூரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. ஸ்ரீவில்லிப்புத்தூரில் வரும் ஜூலை 26ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 2ஆம் திகதிவரை தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன்மூலம் ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டத்தில் 28 கிராமங்களில் தளர்வுகளின்றி முழு முடக்கம் அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிப்புத்தூரில் இதுவரை 486 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பால், மருத்துவம் சார்ந்த பணிகளைத் தவிர வேறு எதற்கும் இந்த தேதிகளில் அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையைப் பொறுத்தவரை நேற்று ஒரே நாளில் 189 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்தும் பொருட்டு இன்று (25) மாலை 5 மணி முதல் 27ஆம் திகதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருச்சியைப் பொறுத்தவரை நேற்று 217 பேருக்கு உட்பட இதுவரை 3,089 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீப நாட்களாகத் திருச்சியிலும் பாதிப்பு வேகமெடுத்துள்ள நிலையில் அங்கு 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest Posts

சினிமா

x