வீட்டிலேயே அழகான பாதங்களை எப்படி பெறுவது?

வாழைப்பழத்தை மசித்து அதனை பாதவெடிப்பு உள்ள இடத்தில் தடவி குளிர்ந்த நீரில் கழுவி வர வறட்சி நீங்கி பாதம் ஈரம்பதம் பெறும். இதனை வாரமிருமுறை செய்து வரலாம்.

வீட்டிலேயே அழகான பாதங்களை எப்படி பெறுவது?

முகம் பொலிவாக இருக்க ஆயிரம் மெனக்கெடல்கள் செய்வோம். ஆனால், பாதவெடிப்பை பலர் கண்டுகொள்வதில்லை. உலர்ந்த காற்று, போதுமான ஈரப்பதமின்மை, முறையான பாத பராமரிப்பின்மை, ஆரோக்கியமற்ற உணவுகள், வயதாகுதல், நீண்ட நேரம் நிற்பது மற்றும் பொருத்தமில்லாத காலணிகளை அணிவது  போன்றவை பாதவெடிப்புக்கு காரணமாக உள்ளது.

பார்லர் செல்லாமல் பாதவெடிப்பை வீட்டிலேயே எப்படி சரிசெய்யலாம் என பார்போம்.

மருதாணி இலைகளை அரைத்து பாத வெடிப்பில் பூசி வர பாதவெடிப்பு குணமாகும். பப்பாளி பழத்தை கூழாக்கி அதனை அரைத்து பாதவெடிப்பில் பூசி வர உலரவிட்டு கழுவி வர பாதவெடிப்பு நீங்கும்.

வாழைப்பழத்தை மசித்து அதனை பாதவெடிப்பு உள்ள இடத்தில் தடவி குளிர்ந்த நீரில் கழுவி வர வறட்சி நீங்கி பாதம் ஈரம்பதம் பெறும். இதனை வாரமிருமுறை செய்து வரலாம்.

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அக்கலவையில் பாதங்களை 10 நிமிடம் ஊற வைத்து பிரெஷ் கொண்டு தேய்து கழுவி வர இறந்த செல்கள் நீங்கும். இதன் பின்னர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை தடவினால் வறட்சி நீங்கும்.