கோடை விடுமுறையில் உங்கள் குழந்தைகளை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள எளிய வழிகள்!

புதிய திறன் மற்றும் பொழுதுபோக்குகளை கற்றுக்கொடுங்கள்: குழந்தைகளுக்கு புதிய திறன்களை கற்றுக்கொடுக்கு உரிய நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் கற்று தரும் விஷயம் ஏற்கனவே அவர் அனுபவிக்கும் ஒன்றை விட சிறந்ததாக இருக்க வேண்டும்.

கோடை விடுமுறையில் உங்கள் குழந்தைகளை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள எளிய வழிகள்!

உங்கள் குழந்தைகள் விடுமுறை நாள்களிலும் சுறுசுறுப்பாகவும், முழு ஈடுபாட்டுடன் எந்த சவால்களை எதிர்கொள்ளும் விதமாக வைத்துக்கெள்ள வேண்டிய பெற்றோரின் கடமையாகும். தற்போது விடுமுறையில் இருந்து வரும் உங்கள் வீட்டு பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாகவும், சுறுசுறுப்பாக இருக்கு பெற்றோர்கள் செய்ய வேண்டியதை பார்க்கலாம்.

கோடை விடுமுறை

கோடை விடுமுறை என்பது காலப்போக்கில் மாறியுள்ளன. இந்த விடுமுறை நாள்களை குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே சென்று நண்பர்களுடன் விளையாடுவது, தாத்தா பாட்டி வீடுகளுக்கு செல்வது, வீட்டுப்பாடங்களை முடிப்பது என ஒரு காலத்தில் இருந்து வந்தார்கள். 

ஆனால் தற்போது குழந்தைகளை மேற்கூறியது போன்று ஏதாவது செயல்களில் ஈடுபாட்டுடன் வைப்பது சவாலான விஷயமாக உள்ளது. கோடை காலம் முழு வீச்சை அடைந்துள்ள இந்த வேலையில், குழந்தைகளை சுறுசுறுப்பாக வைப்பதற்கான சில டிப்ஸ்களை காணலாம்.

உங்கள் குழந்தைகளுடன் இருப்பதற்கான நேரத்தை திட்டமிடுங்கள்: நீங்கள் உள்ளூரில் இருந்தாலும் சரி, வெளிநாடுகளுக்கு சென்றாலும் சரி உங்கள் குழந்தைகளுடன் தவறாமல் நேரத்தை செலவிட வேண்டும். உங்கள் அனுபவங்களை அவர்களுடன் பகிருங்கள். குடும்பாக இணைந்து கைவினைப்பொருள்கள் உருவாக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும். 

உங்கள் வீட்டை சுற்றிய பகுதிகளில் நடைப்பயிற்சி, ஜாக்கிங் போன்ற உடல் ரீதியான செயல்பாட்டை வெளிப்படுத்துங்கள். இவ்வாறு செய்வதால் குடும்ப உறவுகளை வலுப்படுத்துவதோடு, அவர்களின் படைப்பு மற்றும் செயல்திறன்களையும் மேம்படுத்துகிறது

புதிய திறன் மற்றும் பொழுதுபோக்குகளை கற்றுக்கொடுங்கள்: குழந்தைகளுக்கு புதிய திறன்களை கற்றுக்கொடுக்கு உரிய நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் கற்று தரும் விஷயம் ஏற்கனவே அவர் அனுபவிக்கும் ஒன்றை விட சிறந்ததாக இருக்க வேண்டும். 

நீச்சல், டான்ஸ், வண்ணம் தீட்டுதல், பட்ம வரைதல் என எதுவாக இருந்தாலும் அவர்களோடு இணைந்து ஒன்று கூடி மகிழ்விக்க வேண்டும். அவர்களின் ஆக்கத்திறனை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கும் செயல்திறன்களின் கவனம் செலுத்த வேண்டும். இவை அவர்களுக்கு ஆர்வத்தை தூண்டி திறன்களை மேம்படுத்த உதவுகிறது

புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்துதல்

கோடை கால விடுமுறையை பள்ளி தொடர்பான பணிகள், வீட்டுப்பாடங்களில் என முழுமையாக ஈடுபடுத்தாமல் புத்தக வாசிப்பு மீதான ஆர்வத்தை உருவாக்குகள். நீங்கள் புத்தகங்கள் வாசித்து கதைகள் கூறி, பின் அவர்களை வாசிக்குமாறு ஊக்கப்படுத்தலாம். 

புத்தக வாசிப்பை நாளுக்கு நாள் அவர்கள் வளர்த்துக்கொள்வதன் மூலம் குழந்தைகளின் கற்பனை மற்றும் படைப்பாற்றல் திறனும் மேம்படுகிறது. இதனால் பல்வேறு வித்தியாசமான யோசனைகள் தோன்றுவதோடு, கதாபாத்திரங்களை கற்பனை செய்து பார்க்கும் திறனும் அதிகரிக்கிறது

கோடை கால கிறுக்கல் புத்தகத்தை உருவாக்குங்கள்

கோடை கால விடுமுறையை கேட்ஜெட்கள் பயன்பாடு இல்லாமல் உங்கள் குழந்தைகளுடன் பல்வேறு விதமான வித்தியாசமான செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவ பள்ளி நேரத்திலேயே போதுமான அளவில் அவர்கள் கேட்ஜெட்களை பயன்படுத்திவிட்டதால், மற்ற செயல்பாடுகள் மீது அவர்கள் கவனத்தை திசை திருப்பினால் பல்வேறு நன்மைகள் தருவதாக அமையும். 

எனவே கிறுக்கல் புத்தகம் ஒன்றை உருவாக்கி அதில் புகைப்படங்கள், நினைவு பொருள்களை ஒட்டுதல், மறக்க முடியாத தருணங்களை குறிப்படுதல் போன்றவற்றை செய்ய வைக்க வேண்டும். உங்கள் குழந்தைகளிடம் அவர்களுக்கான இதழை உருவாக்க ஊக்குவியுங்கள். இதன் மூலம் பல்வேறு விதமான யோசனைகள் மனதில் உதிப்பதோடு, சுயத்தை பிரதிபலிக்க உதவுகிறது. அத்துடன் பிரச்னைகள் மற்றும் அச்சங்களை சமாளிக்க உதவுகிறது

உங்கள் குழந்தைகளுக்கான விளையாட்டுகளை ஏற்பாடு செய்யுங்கள்: உங்கள் குழந்தைகளின் சமூக மற்றும் குழுப்பணி திறன்களை வளர்க்கும் விதமாக கோடை விடுமுறையை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இதற்காக அவர்கள் பள்ளி நண்பர்களோடு விளையாட்டுகளை ஏற்பாடு செய்யுங்கள். 

இதற்கான வாய்ப்பு அமையவிட்டால் கோடை கால வகுப்புகளின் மூலம் அவர்களின் உணர்வு மற்றும் சமூக திறன்களை மேம்படுத்தி, அதை மற்றவர்களுடன் பகிர்தல், உரையாடுதல் பற்றி கற்றுக்கொடுங்கள். அவர்களாகவே செய்யும் செயல்பாடுகளை உள்ளடக்கிய கலை மற்றும் கைவினை பொருள்கள், படம்வரைதல், வண்ணம் தீட்டுதல் போன்ற பணிகளை ஏற்பாடு செய்து அவர்களின் ஆக்கத்திறனை மேம்படுத்தி நேரத்தை மிகழ்ச்சியாக கடந்து செல்ல உதவுங்கள்

நீங்கள் மேற்கூறிய ஏதாவது ஒரு செயல்பாடுகளை உங்கள் குழந்தைகளுக்கு பின்பற்ற வைப்பதன் மூலம் அவர்களின் முடிவெடுக்கும் திறன் அதிகரித்து தன்னம்பிக்கையும் மேம்படுகிறது