ருகுணு தொழிற்சாலையில் ஒரு மில்லியன் தொன் சீமெந்து அரைக்கும் திறன் விரிவாக்கம்

நிறுவனத்தின் வேகமாக விரிவடைந்து வரும் உற்பத்தித் துறைக்கு உதவும் அதே வேளையில் சீமெந்திற்கு உள்ளூரில் அதிகரித்து வரும் கேள்வியைப் பூர்த்தி செய்கின்றது  

ருகுணு தொழிற்சாலையில் ஒரு மில்லியன் தொன் சீமெந்து அரைக்கும் திறன் விரிவாக்கம்
இடமிருந்து வலம்-குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி -ஐடன் லைனம், நிறைவேற்று அல்லாத பணிப்பாளர் - ஜெனரல் தயா ரத்நாயக்க, தலைவர்-நந்தன ஏக்கநாயக்க, ரிஸ்மி ரிஷார்ட் - நிர்வாகமற்ற இயக்குனர் குஸ்டாவோ நவரோ - CEO

நாட்டின் மிகப் பெரிய சீமெந்து உற்பத்தியாளரான INSEE Cement நிறுவனம், இலங்கையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமும், நிலைபேற்றியலுடனான கட்டுமானப் பொருட்களை உற்பத்தி செய்வதன் மூலமும் உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் முதலீடு செய்து, காலியில் உள்ள அதன் Ruhunu Cement Works (RCW) தொழிற்சாலையில் வருடத்திற்கு ஒரு மில்லியன் தொன் சீமெந்து அரைக்கும் திறன் விரிவாக்கத்தை மேற்கொண்டுள்ளமை தொடர்பில் அறிவித்துள்ளது.

முதலீட்டுக்கான தீர்மானம் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையினால் முன்வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து Siam City Cement Group குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எய்டன் லைனாம் அவர்கள் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டார். RCW தொழிற்சாலைக்கும் அவர் விஜயம் செய்திருந்ததுடன், உள்ளூர் செயல்பாடுகளை நேரடியாக கண்டறிந்து கொண்டார்.

INSEE Cement நிறுவனத்தின் காலி தொழிற்சாலை தற்போது 1.4 மில்லியன் தொன் சீமெந்து அரைக்கும் திறனைக் கொண்டுள்ளதுடன், புத்தளம் தொழிற்சாலையின் 1.3 மில்லியன் தொன் சீமெந்து அரைக்கும் திறனுக்கு இது வலுச் சேர்க்கின்றமை குறிப்பிடத்தக்கது. அதிகரித்து வரும் உள்ளூர் தேவையை பூர்த்தி செய்வதற்காக 2020 ஜூன் முதல் இரண்டு தொழிற்சாலைகளும் அதிகபட்ச திறனில் சீமெந்து அரைக்கும் வளங்களை 100% பயன்படுத்தி இயங்கி வருகின்றன.

“INSEE Cement நிறுவனம் நாட்டின் முன்னணி சீமெந்து உற்பத்தியாளர்களில் ஒன்றாக தனது ஸ்தானத்தை நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், மீண்டும் தலைநிமிர முயன்று  வருகின்ற கட்டுமானத் தொழிற்துறைக்கு உயர்தர மூலப்பொருட்கள் தாராளமாக கிடைக்கப்பெறுவதை உறுதி செய்கிறது," என்று குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எய்டன் லைனம் அவர்கள் கருத்து வெளியிட்டார்.

புதிதாக திட்டமிடப்பட்டுள்ள சீமெந்து அரைக்கும் நிலையம், முதன்மையான மேற்குலக சந்தைக்கும் வளர்ந்து வரும் தெற்குலக சந்தைக்கும் இடையில் அதன் மூலோபாய அமைவிடம் காரணமாக காலியில் உள்ள RCW தொழிற்சாலையில் முன்பு தொழிற்சாலையாக இயங்கி கைவிடப்பட்ட நிலத்தில் அமைக்கப்படும் (brownfield) செயற்திட்டமாக நிறுவப்படும். இது அருகிலுள்ள துறைமுகம் மற்றும் தரைமார்க்க சரக்கு விநியோக வலையமைப்புக்களை திறம்பட அணுக முடியும் என்பதுடன், இதன் மூலமாக உற்பத்தி ஆலை மற்றும் சந்தைகளுக்கு இடையில் அதன் செயல்பாட்டை மேம்படுத்துவதன் அனுகூலத்தை நிறுவனம் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இந்த செயற்திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்ட குழும-வாரியான INSEE நிலைபேண்தகமை இலட்சியம் 2030 (INSEE Sustainability Ambition 2030) உடன் ஒத்திசையும் வகையில் முன்னெடுக்கப்படுவதுடன், நிறுவனத்தின் இலட்சியம் மிக்க நிறுவன நிலைபேண்தகமை இலக்குகளுக்கு பங்களிக்கும்.

இலங்கை சந்தையில் முன்னணி சீமெந்து வர்த்தகநாமமாக, INSEE Cement தயாரிப்புகள் பல தசாப்தங்களாக வலுவான வர்த்தகநாம பங்கு, நம்பகமான வகையில் தொடர்ச்சியான தரம் மற்றும் நிலைபேண்தகமையுடன் முன்னெடுத்துச் செல்லப்படும் தனித்துவமான வேறுபாடு ஆகியவற்றுடன் சிறந்த ஸ்தானத்தில் நிலைபெற்றுள்ளன. INSEE Cement வர்த்தகநாமங்கள் இலங்கையில் மிகவும் அபிமானம் பெற்ற மற்றும் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட வர்த்தகநாமங்களாகத் திகழ்ந்து வருகின்றன.  

இந்த செயற்திட்டம் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் செயல்படத் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW