டி20 உலகக்கிண்ணம்: இறுதிப் போட்டியை தவறவிட்டது இந்தியா

ICC T20 World Cup: இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுக்கொண்டது.

டி20 உலகக்கிண்ணம்: இறுதிப் போட்டியை தவறவிட்டது இந்தியா

டி20 உலகக்கிண்ணம்  22 கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடின. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுக்கொண்டது.

அடிலெய்டில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது.

இதில் அதிக பட்சமாக பாண்ட்யா 63 ரன்களும், விராட் கோலி 50 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

கோலி சாதனை

இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்த தொடரில் 4 அரை சதம் அடித்த விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

அவருக்கு அடுத்தப்படியாக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா உள்ளார். அதனை தொடர்ந்து மார்ட்டின் கப்தில் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் உள்ளனர்.

டி20 உலகக்கிண்ணம்: நாணய சுழற்சியில் வென்றுள்ள இங்கிலாந்து பந்துவீச்சு!

இறுதிப்போட்டியில் நுழைந்தது இங்கிலாந்து

சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அலெக்ஸ் ஹேல்ஸ் - ஜோஸ் பட்லர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். 

தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசி மிரளவைத்தனர். 

இந்திய அணியின் புவனேஷ்வர்குமார், அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியான், அக்ஸர் படேல், அஸ்வின் என எந்த பந்துவீச்சாளர் பந்துவீசினாலும் இருவரும் பிரித்து மேய்ந்தனர். 

தொடர்ந்து அதிரடியாக விளையாடி அலெக்ஸ் ஹேல்ஸ் 28 பந்துகளில் அரைசதம் அடிக்க, மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தைய ஜோஸ் பட்லரும் அரைசதம் கடந்தார். இதனால் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 150 ரன்களைக் கடந்தது. 

இதனால் 16 ஓவர்களிலேயே இங்கிலாந்து அணி இலக்கை எட்டியதுடன், 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து, நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW