England-and-Australia-in-final-T20I

டி20 தரவரிசையில் முதலிடம் யாருக்கு? : இன்று பலப்பரீட்சை

சர்வதேச டி20 தரவரிசையில் முதலிடத்தை பிடிப்பது யார் ? என்ற பலப்பரீட்சையில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று களமிறங்கவுள்ளன.

ஆஸ்திரேலிய கிரிகெட் அணி இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. தற்போது டி20 தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன.

3 போட்டிகள் டி20 தொடரை 2-0 பூஜ்ஜியம் என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றுவிட்டது. இருப்பினும் இன்று நடைபெறவுள்ள 3வது டி20 போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஏனென்றால் நடைபெறும் போட்டியில் வெல்லும் அணி, சர்வதேச டி20 தரவரிசையில் முதலிடம் பிடிக்கவுள்ளது. இதனால் இரண்டு அணிகளும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளன.

சவுதம்டானில் உள்ள தி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறும் போட்டியில், இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லர் விளையாடமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச டி20 தரவரிசைப் பட்டியலில் தற்போது 5736 புள்ளிகளுடன் 273 ரேட்டிங் பெற்று இங்கிலாந்து அணி முதலிடத்திலும், அதேபோல் 5724 புள்ளிகளுடன் 273 ரேட்டிங் பெற்று ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.

அதற்கு அடுத்தபடியாக 266 ரேட்டிங்குடன் இந்தியா 3வது இடத்திலும், 261 ரேட்டிங்குடன் பாகிஸ்தான் 4வது இடத்திலும் இருக்கின்றது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
3
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
கைது

பெண்களிடம் ஆபாசமாக பேசிய மத போதகர் கைது

Next Article
லண்டன் கோர்ட், ஜூலியன் அசாஞ்சே, அமெரிக்காவுக்கு நாடு கடத்தும், வழக்கு விசாரணை , தொடங்கியது, London Court, Julian Assange

ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் வழக்கு விசாரணை ஆரம்பம்

Related Posts
Read More

விவசாயிகள் பேரணி : டெல்லி எல்லைகள் மூடப்பட்டன; போக்குவரத்துக்கு அனுமதி மறுப்பு

விவசாயிகள் நலனை காக்கும் நோக்கில் இந்திய மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும்…
Read More

லங்கா பிரீமியர் லீக்: முதல் வெற்றியை ருசித்தது கண்டி அணி

லங்கா பிரீமியர் லீக் தொடரின் ஆறாவது போட்டியில் கண்டி டர்கேர்ஸ் அணி 25 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. காலி கிளாடியேற்றர்ஸ் அணியுடனானா இந்தப் போட்டி, ஹம்பாந்தோட்டை…
இன்றைய ராசி பலன்கள்
Read More

இந்த ராசிக்காரர்கள் இன்று சிக்கனமாக செலவு செய்வது நல்லது!

ஒவ்வொரு நாளும் ஏற்படக்கூடிய நல்லது கெட்டதுகளை முன்கூட்டியே தெரிந்து கொண்டால் அதற்கேற்க அவற்றை சுலபமாக கையாளலாம் அல்லவா? அதற்காக தான் ராசிபலன் உதவுகிறது. டிசம்பர்…
Total
3
Share