இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை ஆரம்பம்

0

கொரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு மாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட பயணிகள் விமான சேவையை இன்று முதல் இந்தியா ஆரம்பித்துள்ளது.

முதல்கட்டமாக உள்நாட்டு விமான போக்குவரத்தை மட்டும் இன்று ஆரம்பிக்க மத்திய அரசு முடிவு செய்தது.

இதன்படி, லக்னோ, டில்லி , கல்கத்தா, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விமான சேவை ஆரம்பித்துள்ளது. பயணிகள் 2 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வந்தனர்.

மாஸ்க் அணிந்திருந்த அவர்கள், தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதற்காக பயணிகள், விமான நிலையம் முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

பெரும்பாலான பயணிகள் முகத்தை முழுவதும் மூடும் வகையிலான பிளாஸ்டிக் மாஸ்க்கையும் அணிந்திருந்தனர்.

சென்னையில் இருந்து இன்று காலை 6.35 மணிக்கு இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் டில்லி கிளம்பி சென்றது.

260 பேர் பயணிக்கக்கூடிய இந்த விமானத்தில் 111 பேர் மட்டுமே பயணம் செய்தனர்.

தமிழகத்தில், சென்னை – தூத்துக்குடி, சென்னை – மதுரை, கோவை – ஐ தராபாத், கோவை – மும்பை இடையே விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.

x