கொரோனா தடுப்பூசி போடுவதாக தெரிவித்து சிறுமிகளுக்கு பெண்ணுறுப்பு சிதைப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி தனது மூன்று இளம் மகள்களுக்கும் பெண்ணுறுப்பு சிதைப்பு சடங்கு செய்த தந்தை ஒருவர் எகிப்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், அவருக்கு உடந்தையாக இருந்த மருத்துவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

தந்தையிடம் இருந்து பிரிந்து வாழும், சிறுமிகளின் தாய் அளித்த புகாரின்பேரில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்கள்.

கொரோனா வைரஸ் தொற்று தாக்காமல் இருக்க தடுப்பூசி செலுத்தப்படுவதாகக் கூறி, அந்த சிறுமிகளுக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு, இந்த சடங்கு செய்யப்பட்டுள்ளதாக விசாரித்த அதிகாரிகள் கூறுகின்றனர்.

2008ஆம் ஆண்டு முதல் எகிப்தில், சிறுமிகளுக்கு பெண்ணுறுப்பு சிதைப்பு செய்வது குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சிறுமிகளுக்கு இந்த சடங்கு செய்வது தொடர்ந்து வருகிறது. கலாசார மூட நம்பிக்கையினால் பெண்ணுறுப்பு சிதைப்பு நடந்து வருகிறது.

பெண்ணுறுப்பு சிதைப்பால் பெண்களுக்கு சிறுநீர் குழாயில் தொற்று, கருப்பை மற்றும் அதை சார்ந்த உறுப்புகளில் தொற்று, சிறு நீரகத் தொற்று, நீர்க்கட்டிகள், கருத்தரிப்பில் பிரச்சனை மற்றும் உடலுறவின்போது வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

ஆபிரிக்கா மற்றும் அரபு பிராந்தியத்தில் உள்ள 31 நாடுகளில் இப்பழக்கம் உள்ளதுடன், அவற்றில் குறைந்தது 24 நாடுகளில் இதற்கு எதிரான சட்டமும் உள்ளதாக ஐநாவின் குழந்தைகள் அமைப்பான யுனிசெஃப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
3
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

அசுரன் ரீமேக்கில் ப்ரியாமணியின் லுக் வெளியானது

Next Article

நிதிக்காக நிர்வாணப் புகைப்படத்தை ஏலம் விடும் நடிகை!

Related Posts
Read More

தொழிலதிபருடன் திடீர் காதல்.. சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்

விஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை, தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். பிரபல நடிகை பாப்ரி கோஷ். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவர், பெங்காலி…
பசில் ராஜபக்ஷ
Read More

திவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ விடுதலை

திவிநெகும மோசடி வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (30) விடுவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல்…
இன்றைய ராசி பலன்கள்
Read More

இந்த 3 ராசிக்காரர்கள் வீண் விவாதத்தை தவிர்க்காவிட்டால் பின்விளைவு மோசமாக இருக்குமாம்!

நம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் எப்படி இருக்கும் என்று முன்பே தெரிந்தால் அதனை மேலும் சிறப்பாக மாற்றிட முடியும் அல்லவா? அதற்கு உதவுவது தான்…
Total
3
Share