தலைவர் டாஸ்க்கில் துரோகம் இழைக்கப்பட்டதா? : தனலட்சுமி ஆவேசம்

அவரை சமாதானப்படுத்த சக போட்டியாளர்கள் வரும்போது, ‘நான் யாரையும் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நாம் கேம்தானே விளையாடி கொண்டிருக்கின்றோம் என்றும் கோபமாக கூறுகிறார்.

தலைவர் டாஸ்க்கில் துரோகம் இழைக்கப்பட்டதா? : தனலட்சுமி ஆவேசம்

பிக்பாஸ் தமிழ் அப்டேட்

பிக்பாஸ் வீட்டில் இந்த வார தலைவர் டாஸ்க்கில் மைனா நந்தினி வெற்றி பெற்று கேப்டனாக உள்ளார். இதனையடுத்து ஆவேசமான தனலட்சுமி கோபித்துக்கொண்டு அழுதுகொண்டே படுத்திக் கொள்கிறார். 

அவரை சமாதானப்படுத்த சக போட்டியாளர்கள் வரும்போது, ‘நான் யாரையும் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நாம் கேம்தானே விளையாடி கொண்டிருக்கின்றோம் என்றும் கோபமாக கூறுகிறார்.

அதன் பிறகு அவர் ரக்சிதாவிடம் தனலட்சுமி வாக்குவாதம் செய்கிறார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே தயவு செய்து நீங்கள் இந்த இடத்தை விட்டு போங்கள் என அழுது கொண்டே தனலட்சுமி கூறும் காட்சியுடன் இன்றைய புரமோ முடிவுக்கு வருகிறது.

ஒவ்வொரு வாரமும் தலைவர் டாஸ்க்கில் ஒரு சில பிரச்சனைகள் ஏற்பட்டாலும் இந்த வாரம் தனலட்சுமி அந்த பிரச்சனையை அதிகமாக்கி உள்ளதாக தெரிகிறது. 

உண்மையில் தலைவர் டாஸ்க்கில் தனலட்சுமிக்கு துரோகம் இழைக்கப்பட்டதா? மைனாவின் வெற்றி நேர்மையானது இல்லையா என்பதை இன்றைய நிகழ்ச்சியில் தெரிய வரும்.