Thu, May13, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Latest Posts

நாட்டில் கொரோனா தொற்றால் மரணமடைந்தவர்கள் விவரம்

நாட்டில் மேலும் 5 கொரோனா வைரஸ் தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், இதன்படிகொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 507 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் பகுதியை 72 வயதான பெண்ணொருவர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த மாதம் 20ஆம் திகதி மரணித்தார்.

கொவிட் நியூமோனியா, அதிக குருதி அழுத்தம், நீரிழிவு காரணமாக அவர் மரணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில் ஹெம்மாத்தகம பகுதியை சேர்ந்த 19 வயதான யுவதியொருவர் கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில் கடந்த 6ஆம் திகி உயிரிழந்தார். கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணித்தார்.

கொவிட்19 நிமோனியா மற்றும் மூளையில் ஏற்பட்ட கட்டி இந்த மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

தர்கா நகரை சேர்ந்த 51 வயதான பெண்ணொருவர் கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில் இன்று உயிரிழந்தார்.

கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட்19 தொற்றுக்கு உள்ளான அவர், கொத்தலாவல பாதுகாப்பு பீட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது மரணித்தார்.

கொவிட்19 நிமோனியா காரணமாக அவர் மரணித்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கொழும்பு 6 பகுதியை சேர்ந்த 78 வயதான ஆண் ஒருவர், நேற்று மரணமானார். கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு கொவிட்19 தொற்றுறுதியானது.

இதனையடுத்து தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திற்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார். குருதி நஞ்சானதால் ஏற்பட்ட அதிர்வு மற்றும் சீறுநீர் பாதிப்பு, கொவிட்19 நிமோனியா மற்றும் கடுமையான நீரிழிவு நோய் காரணமாக அவர் மரணித்ததாக குறிப்பிடப்படுகின்றது.

ஜாஎல பகுதியை சேர்ந்த 59 வயதான பெண்ணொருவர் மரணித்தார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து கொவிட்19 தொற்றுறுதியானமை கண்டறியப்பட்ட அவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

கொவிட் நியூமோனியாவே அவரது மரணத்திற்கான காரணம் என அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest Posts

சினிமா

x