தனுஷ்க சார்பில் இரண்டாவது பிணை கோரிக்கை தாக்கல்

தனுஷ்க குணதிலக்க சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முதலாவது பிணை மனு கடந்த 7 ஆம் திகதி நிராகரிக்கப்பட்டிருந்தது.

தனுஷ்க சார்பில் இரண்டாவது பிணை கோரிக்கை தாக்கல்

அவுஸ்திரேலியாவில் பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க இரண்டாவது பிணை கோரிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

இலங்கை கிரிக்கட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இரண்டாவது பிணைக்கோரிக்கை மனுவினை எதிர்வரும் 08 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக நிவ் சவுத்வேல்ஸ் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தனுஷ்க குணதிலக்க சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முதலாவது பிணை மனு கடந்த 7 ஆம் திகதி நிராகரிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், தனுஷ்க குணதிலக்கவை சிட்னியிலுள்ள தடுப்புக் காவலுக்கான மத்திய நிலையத்தில் தடுத்துவைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.