Sun, Jan17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இந்த 3 ராசிக்காரர்கள் வீண் விவாதத்தை தவிர்க்காவிட்டால் பின்விளைவு மோசமாக இருக்குமாம்!

நம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் எப்படி இருக்கும் என்று முன்பே தெரிந்தால் அதனை மேலும் சிறப்பாக மாற்றிட முடியும் அல்லவா? அதற்கு உதவுவது தான் ஜாதகம், ஜோசியம் அனைத்துமே.

மேஷம் – இன்றைய தினம் சிறப்பாக தொடங்கும். மனரீதியாக மிகவும் நன்றாக உணர்வீர்கள். அலுவலகத்தில் உங்களது பணியால் நற்பெயர் கிடைக்கப் பெறுவீர்கள். வணிகர்கள் நீண்ட கால பிரச்சனைக்கு இன்று முடிவு காண்பர். திருமண வாழ்க்கை அமைதியானதாக இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். செய்யும் செயலில் மிகுந்த கவனம் தேவை. வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொருளாதார நிலை உயருவதற்கான வாய்ப்புள்ளது. உடல்நலம் சீராக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை

ரிஷபம் – நிதி பிரச்சனைகள் முடிவடைவதற்கான நேரம் வந்துவிட்டது. புதிய வருமானத்திற்கான வாய்ப்பு உருவாகப்போகிறது. நிதி சார்ந்த முடிவுகளை சரியாக எடுக்கும் பட்சத்தில் பொருளாதார நிலை உயரும். வேலையை பொருத்தவரை இன்று சிறப்பான நாளாக இருக்கும். நீண்ட நாட்களுக்கு வியாபாரம் நன்கு நடக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் சில கோப தாபங்கள் இருக்கக்கூடும். பயன்படுத்தும் வார்த்தைகளில் கவனம் தேவை. இல்லாவிட்டால், தேவையில்லாத சிக்கலில் மாட்டிக்கொள்ளக்கூடும். உங்களது அணுகுமுறை அன்புக்குரியவர்களை வருத்தமடைய செய்யலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 3:30 மணி வரை

mithunam

மிதுனம் – குடும்பத்தில் சிறிது பதற்றமான சூழல் நிலவக்கூடும். இன்று, சகோதரர்கள் அல்லது உறவினர்களால், மூதாதையர் சொத்து தொடர்பாக ஒரு தகராறு உருவாகலாம். கோபத்தை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். பண வரவு இருந்தாலும், செலவை கட்டுப்படுத்த வேண்டிய நேரம். அதிகப்படியான செலவு நிதி நிலைமையில் கடும் சரிவு ஏற்படுத்தும். வேலையில் கவனம் செலுத்துவதில் நிறைய சிரமங்களை சந்திப்பீர்கள். வேலைவாய்ப்புக்கு காத்திருப்பவர்களுக்கு இன்று ஏமாற்றமே மிஞ்சும். விடாமுயற்சியுடன் போராடும் பட்சத்தில் விரைவில் நல்ல செய்தி வீடு தேடி வரும். திருமண வாழ்க்கையில் அன்பும், ஆர்வமும் அதிகரிக்கும். ஆரோக்கிய விஷயத்தை புறக்கணிக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:30 மணி முதல் மாலை 3:40 மணி வரை

kadakam

கடகம் – குடும்பத்தாரோடு கருத்து வேறுபாடு உருவாக வாய்ப்புள்ளது. மனஅழுத்தம் அதிகரிக்கக்கூடும். சமநிலையுடன் நடந்துக்கொள்ளாவிட்டால், கடும் விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடும். பேச்சில் கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. பல கவலைகள் உங்களை ஆட்கொள்ளக்கூடும். அதனால், தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். பொருளாதாரத்தை பொருத்தவரை ஏற்றத்தை காண்பீர்கள். வீண் விரையத்தை தவிர்க்கவும். பண விவகாரங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம். நீண்ட நாட்களாக முடிக்க முடியாத வேலை ஒன்றை இன்று முடிக்க முயற்சிப்பீர்கள். அதிகப்படியான மனஅழுத்தம் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:30 மணி முதல் 6:15 மணி வரை

simmam

சிம்மம் – எந்தவொரு வேலையை தொடங்குவதற்கு முன்பும் நன்கு யோசித்து பின்னர் களத்தில் இறங்கவும். அலட்சியப் போக்கு உங்களை பெரும் சிக்கலில் தள்ளிவிடும். வேலையாக இருந்தாலும், வியாபாரமாக இருந்தாலும், ஒவ்வொரு முடிவையும் கவனமாக எடுப்பது நல்லது. வேலை தேடுபவர்களுக்கு நற்செய்தி இல்லம் தேடி வரும். திருமண வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் உண்டாகக்கூடும். பணவரவு உண்டு. பணம் தொடர்பான எந்தவொரு வேலையையும் இன்று மேற்கொள்ள வேண்டாம். பிள்ளைகள் வழியாக சில நற்செய்திகள் வரக்கூடும். ஆரோக்கியம் பற்றி பேசினால், சளி, காய்ச்சல் போன்றவற்றால் அவதிக்குள்ளாவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:15 முதல் 9:20 மணி வரை

kannai

கன்னி – உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். தேவையற்ற விஷயங்களுக்கு செலவு செய்து பணசிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்கள். அதிகப்படியான வேலை காரணமாக இன்று சோர்வாக காணப்படுவீர்கள். உடல் ரீதியாக பலவீனமாக உணர்வீர்கள் என்பதால் போதுமான ஓய்வு எடுக்க வேண்டும். காதல் விஷயத்தில் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. மனதில் இருக்கக்கூடிய பல கலவைகளால், மிகவும் சங்கடமாக உணர்வீர்கள். எதிர்மறை எண்ணங்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும். இதுபோன்ற சமயங்களில், பொறுமையாகவும், தைரியத்துடன் இருக்க வேண்டியது அவசியம். நல்லதே நினைத்தால் நடப்பதும் நல்லதாகவே இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் 10:15 மணி வரை

thulam

துலாம் – பொருளாதார முன்னணியில் நீங்கள் நல்ல முடிவுகளைப் பெறலாம். நிதி நிலைமை மேம்படுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. இன்று குடும்பத்துடன் நிம்மதியான மற்றும் அமைதியான நாளை அனுபவிப்பீர்கள். உங்கள் வாழ்க்கை துணையுடனான காதல் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு மிகப் பெரிய வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் நேர்மையான கடின உழைப்பு எதிர்பார்த்ததை விட பெரிய பலனை உங்களுக்கு வழங்கும். உங்கள் காதல் வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, உங்கள் அன்புக்குரியவரின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சிறப்பான நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 31

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:30 முதல் மாலை 4:00 மணி வரை

viruchigam

விருச்சிகம் – பொருளாதார முன்னணியில் எதிர்பார்த்த முடிவுகள் எட்டப்படாது. திட்டமிட்டு செலவிட பழகிக்கொள்ளுங்கள். பண தகராறு உருவாவதற்கான வாய்ப்புள்ளது. உங்கள் வேலையை சிறப்பாக செய்து முடிப்பதன் மூலம் உயர் அதிகாரியின் நல்லுறவை பெறுவீர்கள். செய்யும் வேலையில் அலட்சியம் காட்டாமல் இருப்பது நல்லது. உங்களை பற்றிய சில தவறான தகவல்களால், பிறரால் துன்புற வாய்ப்புள்ளது. அத்தகையவர்களை புத்திசாலிதனமாக கையாளுவது சிறந்தது. ஆரோக்கியம் சீராக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 முதல் 9:05 வரை

thanusu

தனுசு – இன்று அதிர்ஷ்ட காற்று உங்கள் திசை நோக்கி வீசுகிறது. எனவே, வாழ்க்கியில் சில சாதகமான மாற்றங்கள் நிகழும். அருமையான நாள் இன்று. மிகவும் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். அதனால், பல வேலைகளில் ஒரே சமயத்தில் சுலபமாக செய்து முடிப்பீர்கள். உங்களது பணி திறன் பிறரால் ஈர்க்கப்படும். புகழ் மழையில் இன்று நனையப் போகிறீர்கள். சிறிய கடன் பாக்கியை செலுத்தி முடிப்பீர்கள். வீட்டில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். உடல்நலம் சீராக இருக்கும். பயணத்தின் போது வேகத்தை குறைத்து கொள்ளவும். இல்லையெனில் காயம் ஏற்படக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 21

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 மணி முதல் மாலை 3:00 மணி வரை

magaram

மகரம் – அலுவலகத்தில் உயர் அதிகாரியின் பாராட்டு கிட்டும். சகஊழியர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. வீண் விவாதங்களை தவிர்த்திடவும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்திருக்கும். மிகவும் உற்சாகமாக நாளாக இன்று அமையும். வாழ்க்கையை புதிய திசையில் நடத்திச் செல்வது குறித்து பரிசீலிக்கலாம். வாழ்க்கைத்துணையிடன் சச்சரவு உண்டாகும். கோபத்தை தவிர்த்து, அமைதியை கையாண்டால், பெரிய சண்டை உருவாகாமல் தடுத்திடலாம். பெற்றோரின் சண்டைகள் குழந்தைகளை பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தீட்டிய திட்டங்கள் கடைசி நேரத்தில் மாறக்கூடும். தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை

kumbam

கும்பம் – பொருளாதார சூழ்நிலையில் முன்னேற்றம் காணப்படும். இன்று சில கூடுதல் வருமானத்தை ஈட்ட முடியும். சேமிப்பில் அதிக கவனம் செலுத்தினால், விரைவில் அனைத்து கடன்களிலிருந்தும் விடுபடுவீர்கள். உங்கள் துறையில் சில சிரமங்களை சந்திக்க நேரலாம். கடினமாக உழைத்த பிறகும், நீங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாமல் போகலாம். திருமண வாழ்க்கையைப் பற்றி நீங்கள் பேசினால், உங்கள் துணையுடனான உறவில் ஒரு மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:00 மணி முதல் 12:55 மணி வரை

meenam

மீனம் – வேலையை பொறுத்தவரை இன்று நல்ல நாள். உங்களை தேடி வரும் புதிய வாய்ப்பு, வாழ்க்கைக்கான புதிய திசையை காட்டும். உயர் அதிகாரியின் முழு ஆதரவும் கிடைக்கப்பெறுவீர்கள். எடுத்த காரியத்தை சுலபமாக செய்து முடிப்பீர்கள். வணிகர்கள் நல்ல லாபத்தை காணும் நாள். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். இல்லத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நிதி தொடர்பாக பிரச்சனைகள் எதுவும் இருக்காது. தேவையற்ற விஷயங்களில் நேரத்தை வீணாக்காதீர்கள். திருமண வாழ்வில் காணப்படும் பதற்றம், மறைவதற்கான நேரம் வந்துவிட்டது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:20 மணி முதல் மாலை 3:00 மணி வரை

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest news

Related news