Thu, Jan21, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

DAILY HOROSCOPE 18th november: இன்றைய ராசிபலன்

DAILY HOROSCOPE 18th november : உங்கள் கொழும்பு தமிழ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 18th November 2020: இன்றைய ராசிபலன்: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக்கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் கொழும்பு தமிழ் இந்தியன் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

DAILY HOROSCOPE 18th november: இன்றைய ராசி பலன், நவம்பர் 18, 2020

மேஷம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் மன இறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி குறை கூறுவார். சகிப்புத்தன்மை தேவைப்படும் நாள்.

மிதுனம்: விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். சகோதரங்களால் ஆதாயம் உண்டு.வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை மதித்துப் பேசுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

கடகம்: உறவினர் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத பணவரவு உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்களை நம்பிமூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அமோகமான நாள்.

சிம்மம்: சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபாரத்தில் புது வாடிக்கை
யாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.

கன்னி: கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். மகளுக்கு நல்லவரன் அமையும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

துலாம்: சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். புதுவாகனம் வாங்குவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியமாக சில முடிவுகள் எடுக்கும் நாள்.

விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். புதியவர் நண்பர்களாவார்கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். விசேஷங்களை
முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் உரிமையை பெறுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. மகிழ்ச்சியான நாள்.

தனுசு: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்லக் கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

மகரம்: சில காரியங்களை அலைந்துதிரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கும்பம்: பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

மீனம்: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும்.முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்